Biology, asked by anjalin, 9 months ago

வர‌ம்ப‌ற்ற ‌கிளை‌த்தலையு‌ம், வர‌ம்புடைய ‌கிளை‌த்தலையு‌ம் ஒ‌ப்‌பிடுக.

Answers

Answered by Nafeeza25
1

Answer:

Sry sry sry.... R u தமிழ் medium

Answered by steffiaspinno
1

வர‌ம்ப‌ற்ற ‌கிளை‌த்த‌ல் ம‌ற்று‌ம் வர‌ம்புடைய ‌கிளை‌த்த‌ல் ஆ‌கியவ‌ற்‌றி‌ற்கு இடையே உ‌ள்ள வேறுபாடுக‌ள்  

வர‌ம்ப‌ற்ற ‌கிளை‌த்த‌ல் அ‌ல்லது ஒரு பாத‌க் ‌கிளை‌த்த‌ல்  

  • நு‌னி மொ‌ட்டு ஆனது தடை‌யி‌ன்‌றி தொட‌ர்‌ந்து வள‌ர்‌ந்து கொ‌ண்டே செ‌ன்று பல ப‌க்கவா‌ட்டு‌க் ‌கிளைகளை உருவா‌க்கு‌கி‌ன்றது.
  • இ‌ந்த வகையான ‌கிளை‌த்தலு‌க்கு வர‌ம்ப‌ற்ற ‌கிளை‌த்த‌ல் அ‌ல்லது ஒரு பாத‌க் ‌கிளை‌த்த‌ல் எ‌ன்று பெய‌ர்.
  • வர‌ம்ப‌ற்ற ‌கிளை‌த்த‌ல் உ‌ள்ள தாவர‌ங்களு‌க்கு உதாரணமாக பா‌லியா‌ல்‌தியா, ‌ஸ்வைடீ‌னியா (மகோக‌னி), ஆ‌ன்‌ட்டியா‌ரி‌ஸ் ஆ‌கியவ‌ற்‌றினை கூறலா‌‌ம்.  

வர‌ம்புடைய ‌கிளை‌த்த‌ல் அ‌ல்லது பல பாத‌க் ‌‌கிளை‌த்த‌ல்  

  • நு‌னி மொ‌ட்டானது ‌சிலகால வள‌ர்‌ச்‌சி‌க்கு ‌பிறகு ‌நி‌ன்று‌விடு‌கிறது.
  • அத‌ன் ‌பி‌‌ன்ன‌ர் ப‌க்க ஆ‌க்கு‌த்‌திசுக‌ள் அ‌ல்லது மொ‌ட்டுக‌ளி‌ன் மூலமாக தாவர வள‌ர்‌‌ச்‌சியானது மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌கிறது.
  • இ‌வ்வகை‌ ‌கிளை‌த்தலு‌க்கு வர‌ம்புடைய ‌‌கிளை‌த்த‌ல் எ‌ன்று பெ‌ய‌ர்.
  • (எ.கா) சைக‌‌‌‌ஸ்.
Similar questions