ரைபோசோம்களின் இரண்டு துணை அலகுகளும் எந்த அயனி நிலையில் நெருக்கமாகத் தொடர்ந்து சேர்ந்திருக்கும்? அ) மெக்னீசியம் ஆ) கால்சியம் இ) சோடியம் ஈ) ஃபெர்ரஸ்
Answers
Answered by
0
மெக்னீசியம்
ரைபோசோம்கள்
- 1953 ஆம் ஆண்டு ஜார்ஜ் பாலேடு என்பவர் முதன் முதலாக ரைபோசோம்களை கண்டறிந்தார்.
- இவர் செல்லில் மிக அதிகச் செறிவுள்ள துகள்கள் அல்லது மணிகளாக மின்னணு நுண்ணோக்கியின் மூலம் கண்டு அறிந்தார்.
- மின்னணு நுண்ணோக்கி மூலம் ஒவ்வொரு ரைபோசோம்களும் பெரியதும், சிறியதுமான இரு துணை அலகுகளைப் பெற்று உள்ளதாக கண்டு அறியப்பட்டுள்ளது.
- ரைபோசோம்களின் இரண்டு துணை அலகுகளும் ஒட்டி இருப்பது மெக்னீசியம் அயனியின் (Mg2+) செறிவினை பொருத்து அமைகிறது.
- அதாவது ரைபோசோம்களின் இரண்டு துணை அலகுகளும் மெக்னீசியம் அயனி நிலையில் நெருக்கமாகத் தொடர்ந்து சேர்ந்திருக்கும்.
- ரைபோசோம்கள் புரதச் சேர்க்கை இலக்குகளாக உள்ளன.
- மேலும் சவ்வு சூழா அமைப்புகளாகவும் ரைபோசோம்கள் உள்ளன.
Similar questions