தாவரச் செல்லுக்கும், விலங்கு செல்லுக்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.
Answers
Answered by
2
Sorry dear can't understand.....
Answered by
0
தாவரச் செல்லுக்கும், விலங்கு செல்லுக்கும் உள்ள வேறுபாடுகள்
தாவரச் செல்
- பொதுவாக அளவில் விலங்கு செல்லை விட தாவரச் செல் பெரியதாக உள்ளது.
- தாவரச் செல்லில் பிளாஸ்மா சவ்வுடன் கூடுதலாகச் செல் சுவர் உள்ளது.
- தாவரச் செல்லில் பிளாஸ்மோ டெஸ்மேட்டா உள்ளது.
- தாவரச் செல்லில் பசுங்கணிகம் உள்ளது.
- தாவரச் செல்லில் நிலையான பெரிய வாக்குவோல்கள் உள்ளது.
- இதில் உட்கரு செல்லின் ஓரங்களில் காணப்படும்.
விலங்கு செல்
- பொதுவாக அளவில் தாவர செல்லை விட விலங்கு செல் சிறியதாக உள்ளது.
- விலங்கு செல்லில் செல் சுவர் காணப்படுவது கிடையாது.
- விலங்கு செல்லில் பிளாஸ்மோ டெஸ்மேட்டா காணப்படுவது கிடையாது.
- விலங்கு செல்லில் பசுங்கணிகம் காணப்படுவது கிடையாது.
- விலங்கு செல்லில் தற்காலிகச் சிறிய வாக்குவோல்கள் உள்ளது.
- இதில் உட்கரு செல்லின் மையத்தில் காணப்படும்.
Similar questions