மறைமுக செல்பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏதேனும் மூன்றினை எழுதுக.
Answers
Answered by
0
மறைமுக செல்பகுப்பின் (மைட்டாசிஸ்) முக்கியத்துவம்
நிலைத்த மரபுத்தன்மை
- சேய் செல்களின் மரபுப் பொருள் ஆனது தாய் செல்லை ஒத்து உள்ளது.
வளர்ச்சி
- உரு வளர்ச்சியினை பல செல் உயிரிகள் அடையும் போது அவற்றில் உள்ள திசுக்களில் செல் பெருக்கமடைய மைட்டாசிஸ் உதவுகிறது.
- இவை அனைத்தும் ஒத்த செல்களாகவே காணப்படுகின்றன.
திசு சிதைவதைச் சீர் செய்தல்
- திசு சிதைவடையும் போது, மைட்டாசிஸ் பகுப்பின் மூலம் புதிய உருவொத்த செல்கள் உருவாகி திசு சிதைவு சரி செய்யப்படுகிறது.
பாலிலா இனப்பெருக்கம்
- மைட்டாசிஸ் பகுப்பு ஆனது தாய் செல்லை போன்ற வழித்தோன்றல்கள் பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் உருவாக உதவுகின்றன.
- (எ.கா) ஈஸ்ட் மற்றும் அமீபா.
இழப்பு மீட்டல்
- நட்சத்திர மீன்களின் இழப்பு அடைந்த கரங்கள் மீண்டும் உருவாதலில் மைட்டாசிஸ் பயன்படுகிறது.
Similar questions