குன்றல் பகுப்பில் ஒத்த குரோமோசோம்கள் ஜோடி சேர்தலை இவ்வாறு அழைக்கலாம். அ) இரட்டைகள் ஆ) ஜோடி சேர்தல் இ) பிரிவு நிலை ஈ) சினர்ஜிட்டுகள்
Answers
Answered by
0
Answer:
2nd choice
Explanation:
b) Pair pairing
Answered by
0
ஜோடி சேர்தல்
- குன்றல் பகுப்பில் ஒத்த குரோமோசோம்கள் ஜோடி சேர்தலை சினாப்சிஸ் அல்லது ஜோடி சேர்தல் அழைக்கலாம்.
- இந்த நிகழ்வு ஆனது குன்றல் பகுப்பின் புரோஃபேஸ் 1 என்ற நிலையில் உள்ள சைக்கோட்டீன் என்ற துணை நிலையில் நடைபெறுகிறது.
சைக்கோட்டீன்
- சைக்கோட்டீன் என்ற துணை நிலையில் இரு ஒத்த குரோமோசோம்கள் இணை சேர்கின்றன.
- இரு ஒத்த குரோமோசோம்கள் இணையும் நிகழ்விற்கு சினாப்சிஸ் என்று பெயர்.
- சினாப்டினிமல் தொகுப்பின் உதவியால் இரு ஒத்த குரோமோசோம்கள் இணைவு (சினாப்சிஸ் நிகழ்வு) நடைபெறுகிறது.
- இதன் காரணமாக உருவாகும் இணை குரோமோசோம்களின் தொகுப்பிற்கு பைவாலண்ட் என்று பெயர்.
- இரு குரோமோசோம்களின் நான்கு குரோமாட்டிட்கள் தொகுதி அடைவதால் இது நான்கமை நிலை எனப்படுகிறது.
Similar questions