நொதியின் செயல் வினைகளைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
Answers
Answered by
0
Answer:
sorry I can't understand what is written
Explanation:
please mark me as brainlist than I will give your
all answer of English.
Answered by
1
நொதியின் செயல் வினைகளைப் பாதிக்கும் காரணிகள்
- நொதியின் செயல் வினைகளைப் பாதிக்கும் காரணிகள் வெப்பநிலை, pH, தளப்பொருளின் செறிவு மற்றும் நொதியின் செறிவு ஆகும்.
வெப்பநிலை
- மூலக்கூறுகளின் இடப்பெயர்வு அதிகரிக்க உதவும் காரணியாக வெப்பநிலை உள்ளது.
- இதனால் தளப்பொருள் மற்றும் நொதி மூலக்கூறுகள் வேகமாக நகர்ந்து வினையின் நிகழ்வேகமும் அதிகரிக்கிறது.
- உகந்த வெப்பநிலை என்பது மிக அதிகமான செயல்பாடு நிகழ உதவும் வெப்பநிலை ஆகும்.
pH
- உகந்த pH என்பது வினையின் வேகம் அதிகபட்சமாக உள்ள pH ஆகும்.
- மிக உயர்வான மற்றும் குறைவான pH உள்ள நிலையில் நொதி உருக்குலைகிறது.
தளப்பொருளின் செறிவு
- தளப்பொருளின் செறிவு ஆனது கொடுக்கப்பட்ட நொதிகளின் செறிவில், அதிகரிக்க அதிகரிக்க நொதியினால் ஊக்குவிக்கப்படும் வினையின் வேகம் அதிகரிக்கிறது.
நொதியின் செறிவு
- நொதியின் செறிவு ஆனது அதிகரிக்க அதிகரிக்க நொதியினால் ஊக்குவிக்கப்பட்டு வினையின் வேகமும் அதிகரிக்கிறது.
Attachments:
Similar questions