நொதிகளின் வகைப்பாட்டு உருவரையைச் சுருக்கமாக எழுது.
Answers
Answered by
0
நொதிகளின் வகைப்பாட்டு
ஆக்ஸிடோரிடக்டேஸ்
- ஆக்ஸிடோரிடக்டேஸ் நொதி ஆனது ஆக்ஸிஜனேற்ற - ஒடுக்க வினைகளில் ஈடுபடுகிறது.
- இதற்கு உதாரணமாக டிஹைட்ரோஜினேஸ் என்பதை கூறலாம்.
டிரான்ஸ்ஃபெரேஸ்
- டிரான்ஸ்ஃபெரேஸ் நொதி ஆனது அணுத் தொகுப்புகளை ஒரு மூலக்கூறில் இருந்து மற்றொரு மூலக்கூறுக்கு கடத்தும் பணியில் ஈடுபடுகிறது.
- இதற்கு உதாரணமாக டிரான்ஸ்அமினேஸ், பாஸ்ஃபோ டிரான்ஸ்ஃபெரேஸ் என்பதை கூறலாம்.
ஹைட்ரோலேஸ்கள்
- ஹைட்ரோலேஸ்கள் நொதி ஆனது நீரின் மூலம் தளப்பொருளை நீராற்பகுக்க செய்கிறது.
- இதற்கு உதாரணமாக செரிமான நொதிகளை கூறலாம்.
ஐசோமெரேஸ்
- ஒரு மூலக்கூறிலிருந்து மற்றொன்றிற்கு அணுக்களின் தொகுப்பினை மாற்றி, முதல் மூலக்கூறின் மாற்றியமாக இரண்டாவதை மாற்றுதலில் ஐசோமெரேஸ் ஈடுபடுகிறது.
- (எ.கா) ஐசோமெரேஸ்.
லையேஸ்
- லையேஸ் நொதியானது நீரினைச் சேர்க்காமல் வேதிப் பிணைப்பைத் துண்டிக்கின்றன.
- (எ.கா) டிகார்பாக்ஸிலேஸ்.
லைகேஸ்
- லைகேஸ் நொதியானது ATP யை ஆற்றல் மூலமாக கொண்டு புதிய வேதிப் பிணைப்பை உருவாக்குகிறது.
- (எ.கா) DNA லைகேஸ்.
Similar questions