ஸ்கிலிரைடுகளின் வகைகளை விவரி.
Answers
Answered by
0
Answer:
which language is this please translate in hindi or English.
Answered by
0
ஸ்கிலிரைடுகளின் வகைகள்
பிரேக்கி ஸ்கிலிரைடுகள் அல்லது கல் செல்கள்
- பிரேக்கி ஸ்கிலிரைடுகள் ஆனது ஒத்த விட்டமுடைய ஸ்கிலிரைடுகள் ஆகும்.
- இவை தாவரங்களின் பட்டைகள், பித், புறணி, கடின கருவூண் திசு மற்றும் சில பழங்களின் தசைப் பகுதிகளில் உள்ளன.
- (எ.கா) பேரிக்காயின் தளத்திசு.
மேக்ரோ ஸ்கிலிரைடுகள்
- மேக்ரோ ஸ்கிலிரைடுகள் ஆனது சிறு கழிகள் போன்ற நீண்ட செல்கள் ஆகும்.
- இவை லெகூம் தாவர விதை வெளி உறைகளில் உள்ளன.
- (எ.கா) குரோட்டலேரியா, பைசம்.
ஆஸ்டியோ ஸ்கிலிரைடுகள்
- ஆஸ்டியோ ஸ்கிலிரைடுகள் ஆனது விரிவடைந்த நுனிப் பாகங்களுடன் கூடிய நீண்ட செல்கள் ஆகும்.
- இவை இலைகள், விதை உறைகளில் உள்ளன.
- (எ.கா) பைசம் மற்றும் ஹேகியா விதை உறைகள்.
ஆஸ்டிரோ ஸ்கிலிரைடுகள்
- ஆஸ்டிரோ ஸ்கிலிரைடுகள் ஆனது கிளைத்த பிரிவுகளை உடைய நட்சத்திர வடிவ ஸ்கிலிரைடுகள் ஆகும்.
- இவை இலைகள், இலைக்காம்பில் உள்ளன.
- (எ.கா) தேயிலை, நிம்பையா, ட்ரைகோடென்ட்ரான்.
டிரைக்கோ ஸ்கிலிரைடுகள்
- டிரைக்கோ ஸ்கிலிரைடுகள் ஆனது மெல்லிய சுவருடைய மயிரிழைகள் போன்றவை.
- இவை நீர் தாவரங்களின் தண்டு மற்றும் இலைகளில் உள்ளன.
- (எ.கா) நிம்பையா இலைகள்.
Similar questions