இருவிதையிலை வேருக்கும், ஒருவிதையிலை வேருக்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக.
Answers
Answered by
0
Answer:
i don't no tamil
Explanation:
piz chang your language friend
Answered by
0
இரு விதையிலை வேருக்கும், ஒரு விதையிலை வேருக்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகள்
இரு விதையிலை வேர்
- இரு விதையிலை வேரில் பெரி சைக்கிளிலிருந்து பக்க வேர்கள், பெல்லோஜென் மற்றும் வாஸ்குலக் கேம்பியத்தின் ஒரு பகுதி ஆகியவை தோன்றுகின்றன.
- இரு விதையிலை வேரில் வாஸ்குலத் திசுவில் பெரும்பாலும் சைலம், ஃபுளோயம் பட்டைகள் குறைந்த அளவில் காணப்படும்.
- இரு விதையிலை வேரில் கேம்பியம் ஆனது இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது இரண்டாம் நிலை ஆக்குத்திசுவாக தோன்றுகிறது.
- இரு விதையிலை வேரில் பொதுவாக நான்கு முனை கொண்ட சைலம் காணப்படுகிறது.
ஒரு விதையிலை வேர்
- ஒரு விதையிலை வேரில் பெரி சைக்கிளிலிருந்து பக்க வேர்கள் மட்டுமே தோன்றுகின்றன.
- ஒரு விதையிலை வேரில் வாஸ்குலத் திசுவில் பெரும்பாலும் சைலம், ஃபுளோயம் பட்டைகள் அதிக அளவில் காணப்படும்.
- ஒரு விதையிலை வேரில் கேம்பியம் ஆனது காணப்படவில்லை.
- ஒரு விதையிலை வேரில் பொதுவாக பல முனை கொண்ட சைலம் காணப்படுகிறது.
Similar questions