தண்டில் வாஸ்குலக் கேம்பியத்திற்கு வெளியே காணப்படும் திசுக்கள் - விவரி.
Answers
Answered by
0
தண்டில் வாஸ்குலக் கேம்பியத்திற்கு வெளியே காணப்படும் திசுக்கள்
- இரு வித்திலை தாவரத் தண்டில் உள்ள வாஸ்குலார் கற்றைகளின் இடையில் வாஸ்குலார் கேம்பியங்கள் உள்ளன.
- இந்த வாஸ்குலார்க் கேம்பியங்களின் வெளிப் புறமாக முதல் நிலை ஃபுளோயம், புறணி மற்றும் புறத்தோல் முதலியன உள்ளன.
- அதன் பிறகு தாவரத்தில் இரண்டாம் நிலை வளர்ச்சி ஆனது உருவான பிறகு, கேம்பியம் வளையத்தின் வெளிப் புறமாக இரண்டாம் நிலை ஃபுளோயம் மற்றும் புறணிப் பகுதியில் பெரிடெர்ம் முதலியன உருவாகின்றன.
- பெரிடெர்ம் என்பது தண்டின் வெளிப்புற பாதுகாப்பு அடுக்கு ஆகும்.
- பெரிடெர்மில் ஆக்கத் திசுவான ஃபெல்லோஜென் என்ற கார்க் கேம்பியம் தோன்றுகிறது.
- இது உட்புறமாக இரண்டாம் நிலை புறணியையும், வெளிப் புறமாக ஃபெல்லம் கார்க்கையும் உருவாக்குகின்றன.
Similar questions