ஒரு மரமானது இரவில் ஆக்சிஜனை வெளியேற்றுகின்றது. இந்த கூற்றினை நீ உண்மை என நம்புகிறாயா? உன் விடையை தகுந்த காரணங்களுடன் நியாயப்படுத்துக.
Answers
Answered by
0
ஆக்சிஜன் வெளியேற்றம்
- ஒரு மரமானது இரவில் ஆக்சிஜனை வெளியேற்றுகின்றது என்ற கூற்று தவறானது ஆகும்.
ஒளி வினை
- ஒளிச்சேர்க்கை ஒளிவினையில் குளோரோஃபில்கள் மூலமாக சூரிய ஆற்றல் ஆனது கவரப்பட்டு வேதி ஆற்றலான தன்மயமாதல் ஆற்றல்களான ATP மற்றும் NADPH + H+ சேமித்து வைக்கப்படுகிறது.
- இவற்றுள் NADPH + H+ ஆனது ஒடுக்கும் ஆற்றலாக செயல்படுகிறது.
- பசுங்கணிகத்தில் உள்ள தைலகாய்டு சவ்வுகளில் ஒளி வினையானது நடைபெறுகிறது.
- பகலில் நடைபெறும் இந்த நிகழ்வில் நீர் மூலக்கூறானது ஒளியினால் பிளக்கப்பட்டு ஆக்சிஜன் வெளியேற்றப்படுகிறது.
- ஆனால் இரவில் சுவாசம் நடைபெறுவதால் தாவரங்கள் ஆக்சிஜனை உள்வாங்கி கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது.
- எனவே ஒரு மரமானது இரவில் ஆக்சிஜனை வெளியேற்றுகின்றது என்ற கூற்று தவறானது ஆகும்.
Similar questions