சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகள் யாவை?
Answers
Answered by
1
சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகள்
- ஆக்சின் இருக்கும் போது செல் பகுப்பை தூண்டுகிறது.
- ஒளி உணரும் தன்மை கொண்ட விதைகளில் அதன் உறக்கத்தை நீக்கி முளைக்கும்படி செய்கிறது.
- (எ.கா) புகையிலைத் தாவரம்.
- ஆக்சின் இருக்கும் போது, பட்டாணி தாவரத்தில் பக்க மொட்டுகளின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.
- சைட்டோகைனின் ஆனது கனிம ஊட்ட இடப்பெயர்ச்சி அடையச் செய்து தாவரங்கள் வயதாவதை தாமதம் செய்கிறது.
- இதற்கு ரிச்மாண்ட் லாங்க் விளைவு என்று பெயர்.
- சைட்டோகைனின் புரத சேர்க்கை வீதத்தை அதிகப்படுத்த, கற்றை இடைக் கேம்பியம் உருவாதலைத் தூண்ட மற்றும் புதிய இலைகள், பசுங்கணிகம் மற்றும் பக்க கிளைகள் உருவாதலை தூண்டவும் பயன்படுகிறது.
- தாவரங்கள் மிகத் துரிதமாக கரைப் பொருட்களை சேகரம் அடையச் செய்ய பயன்படுகிறது.
Similar questions