மைட்டோகாண்ட்ரியா உட்சவ்வில் நடைபெறும் வினைகளை விவரி.
Answers
Answered by
0
மைட்டோகாண்ட்ரியா உட்சவ்வில் நடைபெறும் வினைகள்
- மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறச் சவ்வில் (உட்கூழ்மம்) இணைப்பு வினை, கிரப்ஸ் சுழற்சி, எலக்ட்ரான் கடத்து சங்கிலி முதலிய வினைகள் நடைபெறுகின்றன.
பைருவேட் ஆக்சிஜனேற்றம் (இணைப்பு வினை)
- கிளைக்காலைசிஸ் நிகழ்ச்சியால் உருவான இரு பைருவேட் மூலக்கூறுகள் மைட்டோ காண்ட்ரியாவின் மேட்ரிக்ஸ் பகுதிக்கு செல்கிறது.
- இணை நொதி A மற்றும் பைருேவட் டிஹைட்ராஜிேனஸ் நொதி கூட்டமைப்பினால் பைருவேட் ஆனது அசிட்டைல் CoA ஆக மாறுகிறது.
- இதனால் இரு மூலக்கூறு NADH + H+ மற்றும் 2CO2 ஆகியவை உருவாகின்றன.
- இது உருமாறும் வினை அல்லது இணைப்பு வினை என அழைக்கப்படுகிறது.
கிரப்ஸ் சுழற்சி
- மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறத்தில் கிரப்ஸ் சுழற்சி நடைபெறும்.
- கிளைக்காலைசிஸ் நிகழ்ச்சியால் உருவான இரு மூலக்கூறு பைருவின் அமிலம் முழுவதும் ஆக்ஸிகரணம் அடைந்து CO2 மற்றும் நீராக மாறும்.
- கிரப்ஸ் சுழற்சி ஆனது ட்ரை கார்பாக்ஸிலிக் அமில சுழற்சி என அழைக்கப்படுகிறது.
எலக்ரான் கடத்து சங்கிலி
- மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறத்தில் உள்ள எலக்ட்ரான் கடத்து சங்கிலி என்ற அமைப்பில் கிளைக்காலிஸிஸ் மற்றும் கிரப்ஸ் சுழற்சியின் போது உருவான NADH2 மற்றும் FADH2விலுள்ள ஆற்றல் வெளியேற்றப்பட்டு NAD+ மற்றும் FAD+ ஆக ஆக்சிகரணமடைகின்றன.
- வெளியான ஆற்றல் ADPயால் எடுத்துக் கொள்ளப்பட்டு ATP ஆக மாறுகிறது.
- இதற்கு ஆக்சிகரண பாஸ்பேட் சேர்ப்பு என்ற பெயர்.
- இதில் வெளியான எலக்ட்ரானை ஆக்சிஜன் எடுத்துக்கொண்டு நீராக ஒடுக்கமடைகிறது.
Attachments:
Similar questions
Math,
4 months ago
Physics,
4 months ago
India Languages,
4 months ago
Math,
8 months ago
Math,
11 months ago