குளுக்கோஸ் உடையும் மாற்றுவழிப் பாதையின் பெயர் என்ன? அதில் நடைபெறும் வினைகளை விவரி.
Answers
Answered by
0
குளுக்கோஸ் உடையும் மாற்றுவழிப் பாதையின் பெயர் என்ன? அதில் நடைபெறும் வினைகளை விவரி.
snap : sujal3459
insta : sujal_agrawall__
youtb : sweggy guru
Answered by
0
பென்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடம்
- சுவாசிதலின் போது கிளைக்காலிசிஸ் மற்றும் ஆக்சிஜனேற்ற பென்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடம் ஆகிய இரண்டிலும் சைட்டோசோலில் குளுக்கோஸ் உடைவது நடைபெறுகிறது.
- பென்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடம் ஆனது கண்டுபிடித்தவர்களின் பெயரால் வார்பர்க் டிக்கன்ஸ் லிப்மேன் வழித்தடம் என அழைக்கப்படுகிறது.
- இதுவே குளுக்கோஸ் சிதைவடையும் மாற்று வழிப்பாதை ஆகும்.
- இது ஹெக்சோஸ் மானோ ஃபாஸ்பேட் ஷண்ட் அல்லது நேரடி ஆக்சிஜனேற்ற வழித்தடம் என அழைக்கப்படுகிறது.
- இது ஆக்சிஜனேற்ற நிலை, ஆக்சிஜனேற்றமில்லா நிலை என இரு நிலைகளை உடையது.
- ஆக்சிஜனேற்ற நிலையில் 6 கார்பன் உடைய குளுக்கோஸ் 6 பாஸ்பேட், ரிபுலோஸ் 5 பாஸ்பேட்டாக மாற்றமடையும் போது 6CO2 மற்றும் 12 NADPH + H+ உருவாக்கப்படுகிறது.
- ஆக்சிஜனேற்றமில்லா நிலையில் ரிபுலோஸ் 5 பாஸ்பேட் மூலக்கூறுகள் பலதரப்பட்ட இடைப்பொருட்களான ரைபோஸ் 5 பாஸ்பேட், சைலுலோஸ் 5 பாஸ்பேட், கிளிசரால்டிஹைடு 3 பாஸ்பேட், செடோஹெப்டுலோஸ் 7 பாஸ்பேட் மற்றும் எரித்ரோஸ் 4 பாஸ்பேட் முதலியன உருவாகிறது.
- கடைசியில் வழித்தடத்தில் 5 மூலக்கூறுகளான குளுக்கோஸ் 6 பாஸ்பேட் மீண்டும் உருவாகிறது.
Attachments:
Similar questions