தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடு. அ) உருவாக்க நிலையில் செல்பகுப்பை தக்கவைத்துக் கொள்ளும். ஆ) நீட்சியுறு நிலையில் மைய வாக்குவோல் செல்லில் தோன்றுகிறது. இ) முதிர்ச்சியுறு நிலையில் தடிப்படைதல் மற்றும் வேறுபாடு அடைதல் நடைபெறுகிறது. ஈ) முதிர்ச்சியுறு நிலையில் செல்கள் மேலும் வளர்கிறது.
Answers
Answered by
0
Answer:
you will get this answer on Google...
Answered by
0
முதிர்ச்சியுறு நிலையில் செல்கள் மேலும் வளர்கிறது
தாவரத்தின் வளர்ச்சி நிலைகள்
உருவாக்க நிலை
- உருவாக்க நிலை ஆனது வேர் மற்றும் தண்டுத் தொகுப்பின் நுனியில் ஆக்குத்திசு பகுதியில் நடைபெறுகிறது.
- மைட்டாடிக் செல் பகுப்பின் மூலமாக செல்கள் தொடர்ந்து பகுப்படைகின்றன.
- சில செல்கள் செல் பகுப்படையும் திறனை தக்க வைத்துக் கொள்கின்றன.
- பிற செல்கள் அடுத்த வளர்ச்சி நிலைக்கு செல்கின்றன.
நீட்சியுறு நிலை
- நீட்சியுறு நிலையில் ஆக்சின் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படுதல், புதிய செல்சுவர் பொருட்கள் படிதல் (இடையீட்டு படிதல்), புரோடோபிளாசம் அதிகரித்தல், மைய வாக்குவோல் உருவாதல் முதலிய நிகழ்வுகள் நடக்கின்றன.
முதிர்ச்சியுறு நிலை
- முதிர்ச்சியுறு நிலையில் செல்கள் முதிர்ச்சி அடைந்து குறிப்பிட்ட அளவினை பெறுகின்றன.
- முதிர்ச்சியுறு நிலையில் தடிப்படைதல் மற்றும் வேறுபாடு அடைதல் நடைபெறுகிறது.
- முதிர்ச்சியுறு நிலையில் வேறுபாடு அடைதலுக்கு பிறகு செல்கள் மேலும் வளர்வது கிடையாது.
Attachments:
Similar questions