ஒரு பால் மலர்கள் கொண்ட தாவரங்களில் இந்த ஹார்மோன்களால் இனமாற்றம் நிகழ்கிறது. அ) எத்தனால் ஆ) சைட்டோகைனின் இ) ABA ஈ) ஆக்சின்
Answers
Answered by
0
ABA
விவசாயத்தில் அப்சிசிக் அமிலத்தின் (ABA) பங்கு
- ஒரு பால் மலர்கள் கொண்ட தாவரங்களில் அப்சிசிக் அமிலம் (ABA) என்ற ஹார்மோன்களால் இனமாற்றம் நிகழ்கிறது.
- அதாவது கன்னாபிஸ் சட்டைவா என்ற தாவரத்தின் உடைய பெண்பால் தாவரத்தில் ஆண் மலரினை தோற்றுவிக்க அப்சிசிக் அமிலம் (ABA) ஆனது உதவுகிறது.
- மேலும் அப்சிசிக் அமிலம் (ABA) ஆனது குறும்பகல் தாவரத்தில் மலர்தலை தூண்டுதல், உருளைக் கிழங்கு போன்ற சேமிப்பு பாகங்களில் முளைத்தலைத் தூண்டுதல் முதலியனவற்றில் ஈடுபடுகிறது.
- நீர் நெருக்கடியில் இருந்து வறட்சி காலங்களில் தாவரங்களை பாதுகாக்க அப்சிசிக் அமிலம் பயன்படுகிறது.
- வறட்சி காலத்தில் அப்சிசிக் அமிலம் ஆனது தண்டுத் தொகுப்பு வளர்ச்சியினை குறைத்து வேர்களின் வளர்ச்சியினை அதிகரிக்கிறது.
- இதனால் அப்சிசிக் அமிலம் ஆனது ஒரு சிறந்த நெருக்கடிக் கால ஹார்மோன் என அழைக்கப்படுகிறது.
Similar questions