மூப்படைதலின் வகைகளை விவரி.
Answers
Answered by
0
HI HERE IS UR ANSWER
மனித உடல் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அது உருப்பெறுதலும் வளர்ச்சியும் உண்மையிலேயே ஓர் அதிசயம்தான். பண்டைய எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு வியந்துரைத்தார்: ‘நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டேன்.’ (சங்கீதம் 139:14) மனித உடலின் அற்புதங்களை முழுவதும் அறிந்தவர்களாக, சில நவீன விஞ்ஞானிகள் மூப்பையும் மரணத்தையும் ஒரு புதிராக காண்கிறார்கள். நீங்களுமா?
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் உயிரியல் வல்லுநர் ஸ்டீவன் ஆஸ்டட் எழுதினார்: “மூப்பு நம்மை அவ்வளவு தொடர்ச்சியாக எதிர்ப்படுவதால், அதை உயிரியலின் ஒரு முக்கிய மர்மமாக அநேக மக்கள் உணராதிருப்பது குறித்து நான் ஆச்சரியமடைகிறேன்.” அனைவரும் மூப்படைகிற உண்மையானது, “[மூப்படைதல்] சற்றே குழப்பமடைய செய்வதாகத் தோன்றுகிறது,” என்று ஆஸ்டட் குறிப்பிட்டார். இருப்பினும், நீங்கள் உண்மையிலேயே அதைப்பற்றி யோசிக்கும்போது, மூப்படைதலும் மரணமும் அறிவுக்கேற்றதாக இருக்கின்றனவா?
சென்றாண்டு, எப்படி மற்றும் ஏன் நாம் மூப்படைகிறோம் (ஆங்கிலம்) என்னும் தன்னுடைய புத்தகத்தில் டாக்டர் லெனர்டு ஹேஃபிளிக், மனித உயிரையும் அதன் வளர்ச்சியையும் பற்றிய அற்புதங்களை ஒத்துக்கொண்டு, அவர் எழுதினார்: “நம்மை கருவுறுதலிலிருந்து பிறப்புக்கும், பிறகு பாலியல் முதிர்ச்சிக்கும் மற்றும் பருவமடைதலுக்கும் கொண்டுசெல்கின்ற அற்புதங்கள் நிகழ்ந்த பின்னர், இந்த அற்புதங்களை வெறுமனே என்றென்றும் தக்கவைத்துக்கொள்ள, மூப்பை நிறுத்தும் மிகவும் எளிய இயந்திர அமைப்பாகத் தோன்றுவதை உருவாக்க, இயற்கை தேர்ந்தெடுக்கவில்லை. இந்த உட்பார்வைதான் பத்தாண்டுகளாக உயிர் மூப்பியல் மருத்துவர்களைக் [மூப்படைதலின் உயிரியல் அம்சங்களை ஆய்வுசெய்வோரைக்] குழப்பியது.”
மூப்படைதலாலும் மரணத்தாலும் நீங்கள் குழப்பமடைகிறீர்களா? அவை என்ன நோக்கங்களைச் சேவிக்கின்றன? ஹேஃபிளிக் கவனித்ததாவது: “கருவுறுதல் முதற்கொண்டு முதிர்ச்சியடைதல்வரை கிட்டத்தட்ட அனைத்து உயிரியல் நிகழ்ச்சிகளும் ஒரு நோக்கத்தை உடையதாகத் தோன்றுகின்றன, ஆனால் மூப்படைதல் நோக்கத்தைக் கொண்டிருப்பதில்லை. ஏன் மூப்படைதல் நிகழ்கிறது என்பது தெளிவாக இல்லை. மூப்படைதலின் உயிரியலைப்பற்றி நாம் அதிகம் கற்றுக்கொண்டபோதிலும் . . . , நோக்கமில்லாத மூப்பின் தடுக்கமுடியாத விளைவையும் அதனைப் பின்தொடர்ந்து வரும் மரணத்தையும் நாம் இன்னும் எதிர்ப்படுகிறோம்.”
மூப்படைவதற்கும் மரிப்பதற்கும் அல்ல, ஆனால் பூமியில் என்றென்றும் வாழ்வதற்காக நாம் உருவாக்கப்பட்டோம் என்பது சாத்தியமா?
வாழ்வதற்கான ஆவல்
கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் மூப்படைவதையும் மரிப்பதையும் வெறுக்கிறார்கள் என்பதை நிச்சயமாகவே நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். பார்க்கப்போனால், அந்த வருங்கால நிகழ்வுக்குப் பலர் பயப்படுகிறார்கள். நாம் எப்படி மரிக்கிறோம் (ஆங்கிலம்) என்னும் தன்னுடைய புத்தகத்தில், மருத்துவ டாக்டர் ஷெர்வன் பி. நூலண்டு எழுதினார்: “ஒன்றுமில்லாமலோ வெறுமையாகவோ—வெறுமனே ஒன்றுமில்லாமல்—இருக்கும் நிரந்தரமான உணர்வற்ற ஒரு நிலை என்ற கருத்துடன், நாமே மரித்துவிட்ட நிலை என்ற எண்ணத்தை நம்மில் எவரும் மனரீதியில் சமாளிக்க முடிந்திருப்பதாகத் தோன்றவில்லை.” மூப்படைய, நோயுற மற்றும் மரித்துப்போக விரும்பும் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா?
ஆயினும், மூப்பும் மரணமும் இயற்கையானதாகவும் பெருந்திட்டத்தின் பாகமாகவும் இருக்கிறது என்றால் நாம் அவற்றை வரவேற்க மாட்டோமா? நாம் வரவேற்பதே இல்லை. ஏன்? விடையானது நாம் உருவாக்கப்பட்ட விதத்தில் காணப்படுகிறது. பைபிள் சொல்கிறது: “[கடவுள்] நித்தியகால நினைவையும் அவர்கள் [நம்] உள்ளத்திலே வைத்திருக்கிறார்.” (பிரசங்கி 3:11, திருத்திய மொழிபெயர்ப்பு) இந்த முடிவில்லா எதிர்காலத்தின் ஆவல் காரணமாக, இளமையின் ஊற்று என்று அழைக்கப்பட்டதை ஆட்கள் நெடுநாளாய் தேடியிருந்திருக்கிறார்கள். என்றென்றும் இளமையாக இருக்க அவர்கள் விரும்புகிறார்கள். நீண்டநாள் வாழ்க்கைக்கான திறனை நாம் கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
தானாகவே பழுதுபார்க்க வடிவமைக்கப்பட்டிருக்கிறது
இயற்கை வரலாறு (ஆங்கிலம்) பத்திரிகைக்கு எழுதும்போது, உயிரியல் வல்லுநர் ஆஸ்டட் பொதுவான கருத்தை முன்வைத்தார்: “இயந்திரங்களை நாம் நினைக்கும் அதே ரீதியில் நம்மையும் மற்ற மிருகங்களையும் இயல்பாய் நினைக்கிறோம்: தேய்மானம் வெறுமனே தவிர்க்க முடியாதது.” ஆனால் இது உண்மை அல்ல. “அடிப்படையில் உயிரியல் உறுப்புக்கள் இயந்திரங்களிலிருந்து வித்தியாசமானவை. அவை சுயமாக பழுதுபார்ப்பவை: காயங்கள் ஆறும், எலும்புகள் சீராகும், நோய்கள் பறந்துவிடும்,” என்று ஆஸ்டட் கூறினார்.
எனவே, ஏன் நாம் மூப்படைகிறோம்? என்பது அக்கறையை ஈர்க்கும் கேள்வியாக இருக்கிறது. ஆஸ்டட் கேட்டது போலவே: “பிறகு, ஏன் இயந்திரங்களைப் போலவே, [உயிரியல் உறுப்புக்களும்] அதே தேய்மானத்திற்கு இலக்காக வேண்டும்?” உடல்சார்ந்த திசுக்கள் தாமாகவே மாற்றீடு செய்வதால், அதை என்றென்றும் தொடர்ந்து செய்ய அவற்றால் முடியாதா?
கண்டுபிடிப்பு (ஆங்கிலம்) பத்திரிகையில், உடல் உறுப்புக்கள் தாமாகவே பழுதுபார்க்கும் அற்புதத் திறனை பரிணாம உயிரியல் வல்லுநர் ஜார்ரட் டைமண்ட் விவாதித்தார். அவர் எழுதினார்: “காயம் ஆறுவது நம் உடலுக்குப் பொருத்தப்படும் சேத கட்டுப்பாட்டின் மிகவும் காணக்கூடிய அளவிலான உதாரணமாகும், அதன் மூலம் நம் தோலின் சேதத்தை நாம் பழுதுபார்க்கிறோம். பல மிருகங்கள் நம்மைக் காட்டிலும் இன்னும் அதிக பிரமிப்பூட்டும் விளைவுகளை அடையக்கூடும்: பல்லிகள் அறுபட்ட வால்களையும், நட்சத்திர மீனும் நண்டுகளும் தங்களுடைய கைகால் உறுப்புக்களையும் கடல் கீயுகம்பர்கள் தங்கள் குடல்களையும் மீண்டும் உருவாக்க இயலும்.”
PLS MARK ME AS BRAINLIEST
#ladybug
Answered by
0
மூப்படைதலின் வகைகள்
ஒட்டுமொத்த மூப்படைதல்
- ஒட்டுமொத்த மூப்படைதல் ஆனது ஒரு பருவத் தாவரங்களில் நடைபெறுகிறது.
- இதில் முழு தாவரமும் பாதிக்கப்பட்டு இறக்கிறது.
- (எ.கா) கோதுமை மற்றும் சோய மொச்சை.
- ஒட்டுமொத்த மூப்படைதல் ஆனது பல்பருவத் தாவரங்களிலும் நடைபெறுகிறது.
- (எ.கா) அகேவ் மற்றும் மூங்கில்.
மேற்பகுதி மூப்படைதல்
- தாவரங்களின் தரைமேல் பகுதிகளில் மேற்பகுதி மூப்படைதல் நடைபெறுகிறது.
- பொதுவாக இது பல்பருவத் தாவரங்களில் நடைபெறுகிறது.
- தரை கீழ் தண்டு மற்றும் வேர் பகுதிகள் உயிரோடு உள்ளது.
- (எ.கா) வாழை மற்றும் கிளடியோலஸ்.
இலை உதிர்வழி மூப்படைதல்
- பொதுவாக இலையுதிர் தாவரங்களில் இலை உதிர்வழி மூப்படைதல் நடைபெறுகிறது.
- இதில் இலைகள் மட்டுமே மூப்படைந்து உதிர்கின்றன.
- தண்டு மற்றும் வேர் பகுதிகள் உயிருடன் இருக்கும்.
- (எ.கா) எல்ம் மற்றும் மேப்பில்.
படிப்படியாக மூப்படைதல்
- படிப்படியாக மூப்படைதல் ஆனது மெதுவாக நடைபெறுகிறது.
- இது முதலில் முதிர்ந்த இலைகள், அதனை தொடர்ந்து இளம் இலைகள், தண்டு மற்றும் இறுதியாக வேர் தொகுப்புகளில் நடைபெறுகிறது.
- பொதுவாக ஒரு பருவ தாவரங்களில் படிப்படியாக மூப்படைதல் நிகழ்கிறது.
Attachments:
![](https://hi-static.z-dn.net/files/d77/0f8770b4d509a7eaa0664bb7feafdc8a.png)
Similar questions