தாவர ஒளிச்சேர்க்கை மற்றும் பாக்டீரிய ஒளிச்சேர்க்கையினை வேறுபடுத்துக
Answers
Answered by
0
தாவர ஒளிச்சேர்க்கை மற்றும் பாக்டீரிய ஒளிச்சேர்க்கை இடையே உள்ள வேறுபாடுகள்
தாவர ஒளிச்சேர்க்கை
- தாவர ஒளிச்சேர்க்கையில் சுழல் மற்றும் சுழலா ஒளி பாஸ்பரிகரணம் நடைபெறுகிறது.
- தாவர ஒளிச்சேர்க்கையில் நிறமி அமைப்பு I மற்றும் நிறமி அமைப்பு II பங்கு பெறுகிறது.
- தாவர ஒளிச்சேர்க்கையில் எலக்ட்ரான் கொடையாளியாக நீர் உள்ளது.
- இதில் ஆக்சிஜன் உருவாகிறது.
- இதில் வினை மையம் P700 மற்றும் P680 ஆகும்.
- இதில் ஒளிச்சேர்க்கை அமைப்பு பசுங்கணிகம் ஆகும்.
பாக்டீரிய ஒளிச்சேர்க்கை
- பாக்டீரிய ஒளிச்சேர்க்கையில் சுழல் ஒளி பாஸ்பரிகரணம் மட்டும் நடைபெறுகிறது.
- பாக்டீரிய ஒளிச்சேர்க்கையில் நிறமி அமைப்பு I மட்டும் பங்கு பெறுகிறது.
- பாக்டீரிய ஒளிச்சேர்க்கையில் எலக்ட்ரான் கொடையாளியாக H2S உள்ளது.
- இதில் ஆக்சிஜன் உருவாவது கிடையாது.
- இதில் வினை மையம் P870 ஆகும்.
- இதில் ஒளிச்சேர்க்கை அமைப்பு குளோரோசோம் மற்றும் குரோமட்டோபோர் ஆகும்.
Similar questions