கண்ணனை குழந்தையாக பாடியவர் யார் ?
Answers
Answer:
Hello mate................⚘
Explanation:
பெரியாழ்வார் திருமொழி
பெரியாழ்வார் திருமொழி முதல் ஆயிரத்தில், திருப்பல்லாண்டை அடுத்து அமைந்துள்ளது. இதில் 461 பாடல்கள் உள்ளன. கண்ணனைக் குழந்தையாகப் பாவித்துப் பெரியாழ்வார் பாடியுள்ளார். திருவில்லிபுத்தூரில் பிறந்தவர் பெரியாழ்வார். பட்டர்பிரான், விஷ்ணுசித்தன் எனக் குறிக்கப்படுபவர். ஆண்டாளை வளர்த்தவர். கண்ணனின் பிறப்பிற்காக மகிழ்தல், வந்து பிறந்த கண்ணனின் கால்விரல், தொடை, உந்தி, வயிறு, மார்பு, தோள்கள், கைகள், கழுத்து, வாய், கண்கள், புருவங்கள், காதின் குழை, நெற்றிமுடி ஆகியவற்றின் அழகைக் காண அயலவரை அழைத்தல், கண்ணன் தொட்டிலில் உறங்குமாறு பாடும் தாலாட்டுப் பகுதி, நிலவைக் குழந்தையுடன் விளையாட அழைத்தல், தளர்நடை நடக்கும் குழந்தையின் விளையாட்டு, குறும்புச்செயல் என்று யாவற்றையும் பாடுபொருள் ஆக்கிப் பாடியுள்ளார். பிற்காலத்தில் குழந்தையின் வளர்ச்சியைப் பத்துப் பருவங்கள் ஆக்கிப் பத்துப் பத்துபாடல்களில் பாடும், ‘பிள்ளைத் தமிழ்' என்னும் சிற்றிலக்கிய வகைக்கு வித்தாக அமைந்தது பெரியாழ்வாரது பாசுரங்களேயாம். திருமாலுக்குத் திருட்டி படாமல் ‘பல்லாண்டு பாடியதால், ‘பெரியாழ்வார்' என்று அழைக்கப்படுகிறார். பாண்டியன் ஸ்ரீவல்லபன் காலத்தில் அவனது அவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்று வெற்றி பெற்றவர் இவராவர்.
(திருட்டி - கண்ணேறு ; கண்பட்டு ஏதும் கெடுதல் விளைந்து விடுமோ என்று அஞ்சி அதை நீக்க முற்படுதல்.)

pls mark as brainliest answer