பயன்தரும் பாக்டீரியாவை நோயூக்கி பாக்டீரியாவிலிருந்து வேறுபடுத்துக.
Answers
Answered by
3
Answer:
ஆம், பயன் தரும் பாக்டீரியா நமக்கு மிகுந்த நன்மைகளை செய்யும் ஆனால் அதில் சில கெட்ட பாக்டீரியாக்களும் உள்ளது
நம் உடம்பில் 95% நல்ல பாக்டீரியாக்கள் உள்ளது 5% மட்டுமே கெட்ட பாக்டீரியாக்கள் உள்ளது
Explanation:
நானும் ஒரு தமிழ் பொண்ணு தான் நண்பரே......
தமிழ் வாழ்க....
Answered by
10
பயன் தரும் பாக்டீரியா மற்றும் நோயூக்கி பாக்டீரியா ஆகியவைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு
பயன் தரும் பாக்டீரியா
- பயன் தரும் பாக்டீரியங்களின் செயல்பாடுகள் வீடுகள், தொழிற்சாலைகள் உயிர் எதிர்ப்பு பொருள் தயாரித்தல் மற்றும் மண் வள மேம்பாடு ஆகியவற்றிற்கு உதவுகிறது.
- அம்மோனியாவாக்கம், நைட்ரஜனாக்கம், நைட்ரஜனை நிலைப்படுத்துதல் முதலிய மண் வள மேம்பாடு, ஸ்ட்ரெப்டோமைசின், ஆரியோமைசின், குளோரோமைசிட்டின் போன்ற உயிர் எதிர்ப்பு பொருள் தயாரித்தல், லாக்டிக் அமிலம், தயிர், பாலாடைக்கட்டி தயாரித்தல் போன்ற தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் உதவுகின்றன.
- (எ.கா) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் லாக்டிஸ், லாக்டோபேசில்லஸ் லாக்டோஸ் முதலியன ஆகும்..
நோயூக்கி பாக்டீரியா
- நோயூக்கி பாக்டீரியா அல்லது நோய் உண்டாக்கும் பாக்டீரியங்களின் செயல்பாடுகள் தாவரங்கள், மனிதர்கள், விலங்குகளுக்கு நோய்களை உண்டாக்க வழிவகை செய்கிறது.
- (எ.கா) விப்ரியோ காலரே (காலரா), சால்மோனெல்லா டைஃபி (டைஃபாய்டு) மற்றும் மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் (காசநோய்) முதலியன ஆகும்.
Similar questions
Social Sciences,
6 months ago
Math,
6 months ago
Science,
6 months ago
Political Science,
1 year ago
Hindi,
1 year ago
English,
1 year ago