Biology, asked by anjalin, 1 year ago

மூடிய ம‌ற்று‌ம் ‌திற‌ந்த வகை இர‌த்த ஓ‌ட்ட ம‌ண்டல‌த்தை ஒ‌ப்‌பிடுக.

Answers

Answered by Anonymous
9

Answer:

திறந்த சுழற்சியில், இரத்த நாளங்களில் இரத்தம் இணைக்கப்படவில்லை மற்றும் ஹீமோகோயல் எனப்படும் குழிக்குள் செலுத்தப்படுகிறது. மாறாக, மூடிய சுழற்சியில், உடலின் இடையிடையேயான திரவத்திலிருந்து பிரிக்கப்பட்ட பாத்திரங்கள் வழியாக இரத்தம் செலுத்தப்படுகிறது.

Answered by steffiaspinno
3

மூடிய வகை இர‌த்த ஓ‌ட்ட‌ ம‌ண்டல‌ம் ம‌ற்று‌ம் ‌திற‌ந்த வகை இர‌த்த ஓ‌ட்ட‌ ம‌ண்டல‌ம் ஆ‌கி‌யவ‌ற்‌றி‌ற்கு இடையேயான வேறுபாடுக‌ள்  

மூடிய வகை இர‌த்த ஓ‌ட்ட‌ ம‌ண்டல‌ம்

  • மூடிய வகை இர‌த்த ஓ‌ட்ட‌ ம‌ண்டல‌‌த்‌‌தி‌ல் இர‌த்த‌ம் ஆனது ர‌த்த நாள‌ங்க‌ள் (த‌ம‌னி, ‌சிரை, த‌ந்து‌கிக‌ள்) மூல‌ம் உட‌லி‌ன் பா‌க‌ங்களு‌க்கு எடு‌த்து‌ச் செ‌ல்‌ல‌ப்ப‌டு‌கி‌ன்றன.
  • இ‌தி‌ல் இர‌த்த‌ம் ஆனது உட‌லி‌ன் அனை‌த்து உறு‌ப்புகளு‌க்கு‌ம் எடு‌த்து‌ச் செ‌ல்‌ல‌ப்ப‌டு‌கி‌ன்றன.
  • (எ.கா) வளை‌ தசை‌ப் புழு‌க்க‌ள், முதுகு நா‌ணிக‌ள் முத‌லியன ஆகு‌ம்.  

‌திற‌ந்த வகை இர‌த்த ஓ‌ட்ட‌ ம‌ண்டல‌ம்

  • திற‌ந்த வகை இர‌த்த ஓ‌ட்ட‌ ம‌ண்டல‌‌த்‌‌தி‌ல் இர‌த்த‌ நா‌ள‌ங்க‌ள் இர‌த்த‌த்‌தினை எடு‌த்து‌ச் செ‌ல்வது ‌‌கிடையாது.
  • திற‌ந்த வகை இர‌த்த ஓ‌ட்ட‌ ம‌ண்டல‌‌த்‌‌தி‌ல் இர‌த்த‌ம் ஆனது ‌திசு இடைவெ‌ளிக‌ளி‌ல் ‌நிர‌ம்‌பி காண‌ப்படு‌ம்.
  • (எ.கா) கணு‌க்கா‌லிக‌ள், மெ‌‌ல்லுட‌லிக‌ள், மு‌ட்தோ‌லிக‌ள் முத‌லியன ஆகு‌ம்.
Similar questions