பக்கக்கோட்டு உணர்வு உறுப்புகள் இதில் காணப்படுகிறது. அ)சலமான்டர் ஆ) தவளை இ) தண்ணீர் பாம்பு ஈ) மீன்
Answers
Answered by
0
மீன்
- பக்கக்கோட்டு உணர்வு உறுப்புகள் மீனில் (எலும்பு மீன்கள்) காணப்படுகிறது.
- மீன்கள் குருத்தெலும்பு மீன்கள், எலும்பு மீன்கள் என இரு வகுப்புகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
எலும்பு மீன்கள்
- எலும்பு மீன்கள் என்ற வகுப்பில் நன்னீர் மற்றும் கடல் நீரில் வாழும் மீன்கள் உள்ளன.
- இவை எலும்பினால் உருவான அகச் சட்டகம் மற்றும் கதிர் வடிவ உடலை பெற்று உள்ளன.
- கேனாய்டு, சைக்ளாய்டு அல்லது டீனாய்டு வகை செதில்களால் இந்த வகை மீன்களின் தோல் மூடப்பட்டுள்ளது.
- எலும்பு மீன்கள் வயிற்றுப் புறத்தில் அமைந்த ஈரறைகளை உடைய இதயம், அம்மோனியாவை கழிவுப் பொருளாக வெளியேற்றும் மீசோநெஃப்ரிக் சிறுநீரகம் மற்றும் பக்க கோட்டு உணர் உறுப்பு மண்டலம் ஆகியவற்றினை பெற்றுள்ளது.
Similar questions