பெரும்பாலான விலங்குகளில் காணப்படும் பொதுவான நான்கு பண்புகளைக் குறிப்பிடுக.
Answers
Answered by
1
பெரும்பாலான விலங்குகளில் காணப்படும் பொதுவான பண்புகள்
- பொதுவாக பெரும்பாலான விலங்குகளில் செல், திசு, உறுப்பு அல்லது உறுப்பு மண்டல உடற்கட்டமைப்பு காணப்படுகிறது.
- பெரும்பாலான விலங்குகள் ஒட்டியோ அல்லது தனித்தோ அல்லது மிதந்தோ அல்லது நீந்தியோ அல்லது கூட்டமாகவோ வாழும் தன்மையினை உடையவை ஆகும்.
- உடற்குழி அற்றவையாக அல்லது போலியான உடற்குழி உடையவையாக அல்லது உண்மையான உடற்குழி உடையவையாக சில விலங்குகள் உள்ளன.
- பெரும்பாலான விலங்குகள் ஈரடுக்கு அல்லது மூன்று அடுக்குத் தன்மையினை உடையவையாக இருக்கும்.
- விலங்குகள் சமச்சீர் அற்றவையாக, ஆரச்சமச்சீர் உடையவையாக அல்லது இரு பக்க சமச்சீர் உடையவையாக உள்ளன.
- இவற்றில் பாலிலா அல்லது பால் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
- பெரும்பாலான விலங்கினங்கள் மறைமுக வளர்ச்சி மற்றும் லார்வாக்களை பெற்று உள்ளன.
Similar questions