தங்களது கருவளர்ச்சியின் போது ஒரு குறிப்பிட்ட நிலையில் அனைத்து முதுகெலும்பி கருக்களிலும் காணப்படும் பொதுவான பண்புகளைப் பட்டியலிடு.
Answers
Answered by
0
தங்களது கரு வளர்ச்சியின் போது ஒரு குறிப்பிட்ட நிலையில் அனைத்து முதுகெலும்பி கருக்களிலும் காணப்படும் பொதுவான பண்புகள்
முதுகு நாண் உருவாக்கம்
- சில விலங்குகளின் கரு வளர்ச்சி காலத்தின் போது நடு அடுக்கில் இருந்து உருவான தண்டு போன்ற அமைப்பு முதுகுப் புறத்தில் காணப்படும்.
- இதற்கு முதுகு நாண் என்று பெயர்.
- முகுது நாணைப் பெற்ற விலங்குகள் முதுகு நாண் உடையவை என அழைக்கப்படுகின்றன.
- முதுகெலும்பிகள் என அழைக்கப்படும் உயர் முதுகுநாணிகள் தங்களின் கரு வளர்ச்சி நிலையில் மட்டுமே முதுகு நாணை பெறுகின்றன.
- முதுகு நாண் ஆனது முதிர்ந்த விலங்குகளில் குருத்தெலும்பு அல்லது எலும்பிலான முதுகெலும்பு தொடரால் மாற்றீடு செய்யப்படுகிறது.
- மேலும் கரு வளர்ச்சியின்போது முதுகுப்புற நரம்புக்குழல் உருவாக்கம் மற்றும் தொண்டைப்புற செவுள் பிளவுகள் உருவாக்கம் நடைபெறுகிறது.
Similar questions