முதுகு நாணுடைய மற்றும் முதுகு நாணற்ற விலங்குகளின் பண்புகளை ஒப்பிடுக
Answers
Answered by
2
Can u write this question in English?
Answered by
0
முதுகு நாணுடைய மற்றும் முதுகு நாணற்ற விலங்குகளின் பண்புகளை ஒப்பிடுதல்
முதுகு நாணுடைய விலங்குகள்
- முதுகு நாணுடைய விலங்குகளில் முதுகுபுற உள்ளீடற்ற ஒற்றை நரம்பு காணப்படுகிறது.
- இவை முதுகு நாணை பெற்று உள்ளன.
- இவை தொண்டை செவுள் பிளவுகளை பெற்று உள்ளன.
- இவற்றில் வயிற்றுப் புறத்தில் இதயம் உள்ளது.
- இவற்றில் மலத்துளைக்குப் பின் அமைந்த வால் உள்ளது.
- இவற்றில் உணவு குழல் நரம்பு வடத்திற்கு கீழே உள்ளது.
முதுகு நாணற்ற விலங்குகள்
- முதுகு நாணற்ற விலங்குகளில் ஓர் இணை வயிற்றுப்புற திட நரம்பு வடம் காணப்படுகிறது.
- இவை முதுகு நாணை பெற்று இருக்கவில்லை.
- இவை தொண்டை செவுள் பிளவுகளை பெற்று இருக்கவில்லை.
- பெரும்பாலான முதுகு நாணற்ற விலங்குகளில் இதயம் கிடையாது.
- சில விலங்குகளில் இதயம் இருந்தாலும் அது முதுகுப் புறத்திலோ அல்லது பக்கவாட்டிலோ காணப்படுகிறது.
- இவற்றில் மலத்துளைக்குப் பின் அமைந்த வால் இல்லை.
- இவற்றில் உணவு குழல் நரம்பு வடத்திற்கு மேலே உள்ளது.
Similar questions