அரை நாணிகள் பற்றி குறிப்பு வரைக.
Answers
Answered by
1
அரை நாணிகள் (ஹெமிகார்டேட்டா) தொகுதி
- அரை நாணிகள் முதுகுநாணுள்ளவை மற்றும் முதுகுநாணற்ற ஆகிய இரு பிரிவுகளின் பண்புகளையும் பெற்று உள்ளன.
- இவை பொதுவாக நாக்குப் புழு அல்லது அகார்ன் புழு என அழைக்கப்படுகிறது.
- இவை கடல் நீரில் வாழ்கின்ற வளைவாழ் உயிரிகள் ஆகும்.
- இவை உண்மையான உடற்குழி, இருபக்க சமச்சீர் அமைப்புகளை உடைய மூவடுக்கு உயிரிகள் ஆகும்.
- உருளை வடிவ இதன் உடல் ஆனது மூன்று பிரிவுகளை உடையது ஆகும்.
- அவை முன்முனையினுள்ள புரோபோஸிஸ், குட்டையான பட்டை அல்லது கழுத்து பகுதி மற்றும் நீண்ட உடல் பகுதி ஆகும்.
- இவை தொண்டையில் திறக்கும் ஒரு இணை செவுள் பிளவுகள் மூலம் சுவாசிக்கின்றன.
- இவற்றில் பால் இனப்பெருக்கமும், வெளிக்கருவுருதலும் காணப்படுகிறது.
- (எ.கா) பலனோகிளாசஸ், சாக்கோகிளாசஸ் முதலியன.
Attachments:
Similar questions