இரத்தம் ஏன் தனித்துவமான இணைப்புத்திசு என்றழைக்கப்படுகிறது?
Answers
Answered by
1
தனித்துவமான இணைப்புத் திசு என்று இரத்தம் அழைக்கப்படக் காரணம்
இரத்தம்
- சிறப்பு வகை இணைப்புத் திசுக்களின் மூன்று வகைகளுள் ஒன்று இரத்தம் ஆகும்.
- பிளாஸ்மா, இரத்த சிவப்பு அணுக்கள் (RBC), இரத்த வெள்ளை அணுக்கள் (WBC), தட்டைச் செல்கள் முதலிய பகுதிகளை உடைய திரவ இணைப்புத் திசுவே இரத்தம் என அழைக்கப்படுகிறது.
- இரத்தம் ஆனது இதய இரத்தக் குழல் மண்டலத்தில் ஊட்டப் பொருட்கள், கழிவுப் பொருட்கள், சுவாச வாயுக்கள் முதலிய பொருட்களை உடலின் அனைத்து பாகங்களுக்கும் கடத்தும் ஒரு கடத்து ஊடகமாக செயல்படுகிறது.
- இரத்தத்தில் உள்ள இரத்தச் செல்கள் பிற திசுக்களை போல் அல்லாமல் தனித்தனியாக உள்ளது.
- இதன் காரணமாகவே தனித்துவமான இணைப்புத் திசு என்று இரத்தம் அழைக்கப்படுகிறது.
Attachments:
Similar questions