மீள் தன்மை நாரிழைகளை மீள் தன்மை இணைப்புத்திசுவினின்றும் வேறுபடுத்து.
Answers
Answered by
1
மீள் தன்மை நாரிழை மற்றும் மீள் தன்மை இணைப்புத் திசு ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகள்
மீள் தன்மை நாரிழை
- மீள் தன்மை நாரிழை ஆனது எலும்புத் தசைகளோடு எலும்பை இணைக்கும் தசை நாண்கள் மற்றும் எலும்பு இணைப்பு நார்களில் காணப்படுகிறது.
- இது சிறுநீரகம், எலும்புகள், குருத்து எலும்புகள், தசைகள், மூட்டுகள் மற்றும் நரம்புகள் ஆகியவற்றைச் சுற்றி நாரிழை உறைகளை உருவாக்குகிறது.
- இழுக்கப்பட்ட தசைகள் மீண்டும் பழைய நிலையினை அடைதல் மீள் தன்மை நாரிழையால் நடைபெறுகிறது.
மீள் தன்மை இணைப்புத் திசு
- மீள் தன்மை இணைப்புத் திசு ஆனது பெரிய தமனிகளின் சுவர்கள், முதுகெலும்புத் தொடரில் காணப்படும் எலும்பு இணைப்பு நார்கள் மற்றும் சுவாச குழல் சுவர்கள் ஆகியவற்றில் காணப்படுகிறது.
- மீள் தன்மை இணைப்புத் திசுவில் உள்ள நாரிழைகள் அலை போன்ற துடிப்புடன் தமனிகளில் இரத்தம் பாய, உட்சுவாசத்தைத் தொடர்ந்து நடைபெறும் வெளிச் சுவாசத்தின் போது நுரையீரல் சுருங்க பயன்படுகிறது.
Similar questions