இணைப்புத் திசுக்களை வகைப்படுத்தி அவற்றின் செயல்களைத் தருக.
Answers
Answered by
1
can't understand your language
Please Mark Me as Brainliest ❤️
Answered by
2
இணைப்புத் திசுக்களின் வகைகள்
தளர்வான இணைப்புத் திசு
- ஏரியோலார் திசு, அடிபோஸ் திசு, ரெடிகுலார் திசு என மூன்று வகையாக தளர்வான இணைப்புத் திசு பிரிக்கப்பட்டு உள்ளது.
- ஏரியோலார் திசு ஆனது எபிதீலியத்திற்கு தாங்கு சட்டமாகவும், சூழ்ந்துள்ள உடல் திசுக்களுக்கு நீர், உப்பு முதலியனவற்றினை தேக்கி வைக்கும் இடமாகவும் செயல்படுகிறது.
- அடிப்போஸ் திசு ஆனது கொழுப்பை சேமிக்கிறது.
- நிணநீர் கணுக்கள், மண்ணீரல் போன்றவற்றில் இரத்த செல்களுக்கு அகச்சட்டகமாக ரெடிகுலார் திசு உள்ளது.
அடர்வான இணைப்புத் திசு
- எலும்பு மற்றும் எலும்பு தசைகளை இணைக்க அடர்வான சீரான திசு பயன்படுகிறது.
- சிறுநீரகம், எலும்புகள், குருத்தெலும்புகள், தசைகள் முதலியனவற்றினை சுற்றி உறையாக அடர்வான சீரற்ற திசு உள்ளது.
- இழுக்கப்பட்ட தசைகள் மீண்டும் பழைய நிலையினை அடைதல் மீள் தன்மை திசுவில் உள்ள நாரிழையால் நடைபெறுகிறது.
சிறப்பு வகை இணைப்புத் திசு
- குருத்தெலும்புகள் உறுதியானதாக, வளையும் தன்மையுடையதாக மற்றும் அழுத்தத்தை தாங்கக்கூடியதாக உள்ளது.
- உடலுக்கு சட்டமாக அமைந்து உருவத்தை எலும்பு அளிக்கிறது.
- இரத்தம் ஆனது இதய இரத்தக் குழல் மண்டலத்தில் ஊட்டப் பொருட்கள், கழிவுப் பொருட்கள், சுவாச வாயுக்கள் முதலிய பொருட்களை உடலின் அனைத்து பாகங்களுக்கும் கடத்தும் ஒரு கடத்து ஊடகமாக செயல்படுகிறது.
Similar questions