எபிதீலியம் என்றால் என்ன? அதன் பல்வேறு வகைகளின் பண்புகளைத் தருக.
Answers
Answered by
2
Answered by
7
எபிதீலியம்
- எபிதீலியத்திசு என்பது உடலின் மேற்பரப்பிலும், உடற்குழியைச் சுற்றிலும் காணப்படும் செல் வரிசை ஆகும்.
வகைகள்
- எபிதீலியம் ஆனது எளிய எபிதீலியம், கூட்டு எபிதீலியம் என இரு வகைப்படும்.
எளிய எபிதீலியம்
- தட்டை வடிவ எபிதீலியம் ஆனது சிறுநீரகக் கிளாமருலஸ்கள், இதயம், நுரையிரல்களின் காற்றுப் பைகள், இரத்தக் குழல்கள் மற்றும் நிணநீர் நாளங்கள் போன்ற உறுப்புகளில் பாதுகாப்பு உறையாக உள்ளது.
- கனசதுர வடிவ எபிதீலியத்தின் முக்கிய பணி சுரத்தல் மற்றும் உறிஞ்சுதல் ஆகும்.
- தூண் வடிவ எபிதீலிய செல்கள் குடல் பகுதிகளில் செரித்த உணவுகளை உறிஞ்சுகின்றன.
- சிறுநீர் நாளம், சிறிய சுவாசக் குழல்கள் போன்ற உறுப்புகளின் அகவுறையில் உள்ள குறு இழை எபிதீலிய செல்கள் ஆனது தம் குறு இழையினை அசைத்துக் கோழை திரவத்தினை உந்தித் தள்ளுகின்றன.
- பொய் அடுக்கு எபிதீலியத்தின் முக்கிய பணி பாதுகாப்பு, சுரப்பு மற்றும் உறிஞ்சுதல் ஆகும்.
கூட்டு எபிதீலியம்
- கூட்டு எபிதீலியத்தின் முக்கிய பணி வேதிய மற்றும் இயற்பிய அழுத்தங்களிலிருந்து பாதுகாத்தல் ஆகும்.
- அடுக்கு தட்டை எபிதீலியம், கனசதுர வடிவ எபிதீலியம், தூண் வடிவ எபிதீலியம் மற்றும் இடைநிலை எபிதீலியம் என நான்கு வகை கூட்டு எபிதீலியங்கள் உள்ளன.
Similar questions