Biology, asked by anjalin, 9 months ago

தவளை‌யி‌ல் காணு‌ம் சுவாச முறைகளை‌ப் பெய‌ரிடுக.

Answers

Answered by Anonymous
5

Answer:

தவளை தனது தோலால் மற்றும் ஈரளால் சுவாசம் செய்கிறது

Answered by steffiaspinno
0

தவளை‌யி‌ன் சுவாச ம‌ண்டல‌ம்  

  • தவளை ‌நீ‌ரி‌ல் இரு‌‌க்கு‌ம் போது, ‌நீ‌ரி‌ல் உ‌ள்ள ஆ‌க்‌சிஜ‌ன் தோ‌லி‌ன் வ‌ழியே ‌விரவ‌ல் முறை‌யி‌ல் ப‌ரிமா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்படு‌கிறது.
  • ‌நில‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் போது, வா‌ய்‌க்கு‌ழி, தோ‌ல் ம‌ற்று‌ம் நுரை‌யீ‌ர‌ல் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் உத‌வியா‌ல் தவளை‌யி‌ன் சுவாச‌ம் நடைபெறுகிறது.
  • தவளை‌யி‌ன் வா‌ய்‌க்கு‌ழி சுவாச‌‌த்‌தி‌ன் போது வா‌ய் மூடி‌ இரு‌க்கு‌ம் ‌நிலை‌யி‌‌ல், நா‌சி‌த் துளைக‌ள் ‌திற‌ந்து இரு‌க்கு‌ம்.
  • வா‌ய்‌க்கு‌ழி‌யி‌ன் தரை‌ப் பகு‌தி ஆனது மேலு‌ம் ‌கீழு‌ம் ஏ‌‌றி இற‌ங்கு‌ம் போது நா‌சி‌த் துளைக‌ள் வ‌ழியே கா‌ற்று வெ‌ளியே‌ற்ற‌ம் ம‌ற்று‌ம் உ‌ள்ளே‌ற்ற ‌நிக‌ழ்வுக‌ள் நட‌க்‌கி‌ன்றன.
  • தவளை‌யி‌ல் ஓ‌ரிணை நுரை‌யீர‌ல்க‌ள் மா‌ர்‌பி‌ன் மேலே உ‌ள்ளன.
  • நா‌சி‌த் துளைக‌ள் வ‌ழியே உ‌ள்நுழையு‌ம் கா‌ற்று ஆனது வா‌ய்‌க்கு‌‌ழி மூல‌ம் நுரை‌‌யீர‌ல்களை அடை‌கிறது.
  • நுரை‌யீர‌ல்‌க‌ள் மூல‌ம் நடைபெறு‌ம் சுவாச‌ம் நுரை‌யீர‌ல் சுவாச‌ம் என‌ப்படு‌ம்.
  • தோ‌லி‌ன் வ‌ழியாக சுவாச‌ம் ஆனது கோடைகால ம‌ற்று‌ம் கு‌ளி‌ர்கால உ‌ற‌க்க‌த்‌தி‌ன் போது நடைபெறு‌கிறது.
Similar questions