புறாவின் புறப்பண்புகளை எழுதுக.
Answers
Answered by
0
புறாவின் புறப்பண்புகள்
- புறாவின் உடல் ஆனது தலை, கழுத்து, உடல் மற்றும் வால் என உள்ளது.
- மேல் அலகின் அடியில் உள்ள ஓரிணை புறநாசித் துளைகளின் மேல் சியர் என்ற உணர்ச்சிமிகுந்த பருத்த மென்மையான தோல் உள்ளது.
- மேலிமை, கீழிமை மற்றும் ஒளி ஊடுருவும் தன்மையுடைய நிக்டிடேட்டிங் சவ்வு ஆகியவை மூலம் ஓரிணை தெளிவான உருண்டை வடிவ கண்கள் பாதுகாக்கப்படுகின்றன.
- கண்ணிற்கு பின்புறத்திலி செவித்துளை உள்ளது.
- புறாவின் கதிர்வடிவ உடலில் ஓரிணை இறக்கைகள் மற்றும் ஓரிணை கால்கள் உள்ளன.
- உடலின் பின்புறத்தின் இறுதியில் பொதுக் கழிவறைத்துளை உள்ளது.
- புறாவின் வால் பகுதியின் முதுகுப்புறத்தில் உள்ள குமிழ் போன்ற பாப்பில்லாவில் எண்ணெய்ச் சுரப்பி அல்லது யூரோபிஜியல் சுரப்பி காணப்படுகிறது.
- இது இறக்கையில் ஏற்படும் உராய்வினை தடுத்தல், இறகுகளைத் தூய்மையாக வைத்தல் மற்றும் பறக்கும் போது வால் திசை திருப்பியாகவும் செயல் புரிகின்றன.
- இறக்கைகள் மேற்கை, கீழ்க்கை மற்றும் கை என மூன்று பகுதியாக உள்ளது.
- உடலின் வெப்பநிலை எப்போதும் சீராக உள்ளதால் இவை வெப்ப மாறா விலங்குகள் எனப்படுகிறது.
Attachments:
Similar questions