தவளை வளர் உருமாற்றத்தினை பற்றி எழுதுக.
Answers
Answered by
0
Answer:
தவளைகள் நிலநீர் வாழிகள் வகுப்பைச் சேர்ந்த ஒரு வரிசையாகும். இவ்வரிசை அறிவியல் வகைப்பாட்டில் "வாலில்லா" என்று பொருள்படும் அனுரா (Anura) என்றழைக்கப்படுகிறது. முழுவளர்ச்சி அடந்த தவளைகளுக்கு நீண்ட பின்னங்கால்களும், திரண்டு உருண்ட உடலும், விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள கொய்யடி என்னும் பாதங்களும், புறத்தே பிதுங்கி இருக்கும் கண் முழிகளும் கொண்ட வாலில்லா ஓர் இருவாழ்வி விலங்கு. சிறு குட்டைகளிலும், குளங்களிலும் காணப்படுவன. தென் அமெரிக்காவைச் சேர்ந்த சில தவளைகள் மிகுந்த நஞ்சு உடையதாகவும் உள்ளன. சில வகைத் தவளைகள் கூடுகட்டும் திறன் பெற்றுள்ளன. அண்மையில் தென்னிந்தியாவில் கூடு கட்டும் அரியவகைத் தவளை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[1].
Answered by
0
தவளை வளர் உருமாற்றம்
- தவளையில் புறக் கருவுறுதல் ஆனது நடைபெறுகிறது.
- கருவுறுதலுக்கு பிறகு சில நாட்களில் கருமுட்டைகளில் இருந்து தலைப் பிரட்டை என்ற சிறிய வளர் இள உயிரிகள் வெளி வருகின்றன.
- உடலில் சேமிக்கப்பட்டு உள்ள கருவுணவையே தலைப் பிரட்டை உணவூட்டத்திற்குச் சார்ந்து உள்ளது.
- தலைப் பிரட்டைகள் படிப்படியாக வளர்ந்த பிறகு மூன்று இணை செவுள்களைப் பெறுகின்றன.
- தலைப் பிரட்டை வளர்ந்து முதிர்ந்து காற்றை சுவாசிக்கும், ஊனுண்ணும் முதிர் தவளையாக மாறுகிறது.
- இந்த மாற்ற நிகழ்வுகளே வளர் உருமாற்றம் எனப்படுகிறது.
- முதிர் தவளைகளில் வால், செவுள்கள் மறைந்து விடுகின்றன.
- அதன் பிறகு வாய் அகன்று, தாடைகளும் பற்களும், கால்களும் வளர்ச்சி அடைகின்றன.
- அதன் பிறகு நுரையீரல் செயல்படத் துவங்கி சுவாசம் நடைபெறுகிறது.
- இவ்வாறாக முதிர் தவளை உருவாகிறது.
Attachments:
Similar questions