தவளையின் இனப்பெருக்க மண்டலத்தை விளக்குக.
Answers
Answered by
0
அனைத்து தவளைகளும் பாலியல் ரீதியாக இனப்பெருக்கம் செய்கின்றன, மேலும் அனைத்தும் முட்டையிலிருந்து வெளியேறுகின்றன. ஏறக்குறைய அனைத்து தவளைகளிலும், முட்டையின் கருத்தரித்தல் பெண்ணின் உடலுக்கு வெளியே இல்லாமல் நடக்கிறது. பெண் தனது முட்டைகளை வெளியிடுகிறது மற்றும் ஆண் தனது விந்தணுவை ஒரே நேரத்தில் வெளியிடுகிறது.
PLZ MARK ME AS BRAINLIEST!!!!!!!!!!!
Answered by
1
தவளையின் இனப்பெருக்க மண்டலம்
ஆண் தவளையின் இனப்பெருக்க மண்டலம்
- ஆண் இனப்பெருக்க உறுப்புகளாக ஓரிணை விந்தகங்கள் உள்ளன.
- ஆண் தவளையின் ஒவ்வொரு விந்தகமும் மீசார்க்கியம் என்ற பெரிட்டோனிய சவ்வு மடிப்புகள் மூலமாக சிறுநீரகங்கள் மற்றும் முதுகுப் புறச் சுவரில் இணைக்கப்பட்டு உள்ளது.
- ஒவ்வொரு விந்தகங்களில் இருந்து தோன்றுகின்ற விந்து நுண் குழல்கள் இறுதியில் அந்தந்தப் பக்கத்துச் சிறுநீரக நாளங்களில் திறக்கின்றன.
- இதன் காரணமாக சிறுநீரக நாளம் ஆனது பொதுவான கழிவு நீக்க - இனப்பெருக்கப் பாதையாக மாறுகிறது.
பெண் தவளையின் இனப்பெருக்க மண்டலம்
- பெண் இனப்பெருக்க உறுப்புகளாக ஓரிணை அண்டகங்கள் உள்ளன.
- அண்டங்கள் மீசோவேரியம் என்ற பெரிட்டோனிய சவ்வு மடிப்புகள் மூலமாக சிறுநீரகங்கள் மற்றும் முதுகுப் புறச் சுவரில் இணைக்கப்பட்டு உள்ளது.
- ஓரிணை சுருண்ட அண்ட நாளங்கள் சிறுநீரகங்களின் பக்கவாட்டில் உள்ளன.
- அண்ட நாளம் முன்பகுதியில் உடற்குழியில் திறக்கக்கூடிய புனல் வடிவத்திறப்பையும், பொதுக்கழிவுப் பையில் திறக்கும் பின் பகுதியையும் கொண்டு உள்ளது.
- அண்ட நாளங்கள் சிறுநீரக நாளங்களிலிருந்து தனித்து உள்ளன.
- அண்ட நாளங்கள் பொதுக் கழிவுப் பையில் திறப்பதற்கு முன்பே சற்று விரிவடைந்து ஒரு அண்டப்பையாக உள்ளது.
- பொதுக்கழிவுத்துளை வழியே வெளியேற்றப்படுவதற்கு முன்பாக முட்டைகள் அண்டப்பையில் சேமிக்கப்படுகின்றன.
- தவளையில் புறக்கருவுறுதல் நடைபெறுகிறது.
Attachments:
Similar questions
English,
4 months ago
English,
4 months ago
Math,
9 months ago
Math,
9 months ago
India Languages,
1 year ago