கணைய நீர் மற்றும் பைகார்பனேட் உருவாதலைத் தூண்டும் ஹார்மோன் அ) ஆஞ்சியோடென்சின் மற்றும் எபிநெஃப்ரின் ஆ) கேஸ்ட்ரின் மற்றும் இன்சுலின் இ) கோலிசிஸ்டோகைனின் மற்றும் செக்ரிடின் ஈ) இன்சுலின் மற்றும் குளுக்ககான்
Answers
Answered by
0
கோலிசிஸ்டோகைனின் மற்றும் செக்ரிடின்
கணையம்
- கணையம் ஆனது செரிமான மண்டலத்தில் கல்லீரலுக்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய சுரப்பி ஆகும்.
- கணையம் ஆனது நீண்ட மஞ்சள் நிறம் கொண்டது ஆகும்.
- மேலும் இது ஒரு கூட்டுச் சுரப்பி ஆகும்.
- கணையத்தில் நாளம் உள்ள சுரப்பிகளும், நாளம் இல்லாச் சுரப்பிகளும் உள்ளன.
- கணையம் ஆனது முன் சிறுகுடலின் U வடிவப் பகுதியின் இரு தூம்புகளுக்கு இடையில் அமைந்து உள்ளது.
- கணையத்தின் நாளமுள்ள சுரப்புப் பகுதியில் சுரக்கப்படுகின்ற கணைய நீரில், கணைய அமைலேஸ், டிரிப்ஸின், கணைய லிபேஸ் முதலிய நொதிகள் உள்ளன.
- கணையத்தின் நாளம் இல்லா சுரப்புப் பகுதியான லாங்கர்ஹான் திட்டுகளில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் இன்சுலின் மற்றும் குளுக்ககான் ஆகும்.
- கணைய நீர் மற்றும் பைகார்பனேட் உருவாதலைத் தூண்டும் ஹார்மோன்கள் முறையே கோலிசிஸ்டோகைனின் மற்றும் செக்ரிடின் ஆகும்.
Similar questions