எண்டிரோகைனேஸ் எதனை மாற்றுவதில் பங்கேற்கிறது. அ) பெப்ஸினோஜனை பெப்ஸினாக மாற்றுதலில் ஆ) டிரிப்ஸினோஜனை டிரிப்ஸினாக மாற்றுதலில் இ) புரதங்களைப் பாலிபெப்டைடுகளாக மாற்றுதலில் ஈ) காசினோஜனை காசினாக மாற்றுதலில்
Answers
Answered by
0
டிரிப்ஸினோஜனை டிரிப்ஸினாக மாற்றுதலில்
சிறு குடலில் உணவுச் செரித்தல்
- பித்த நீர், கணைய நீர் மற்றும் சிறுகுடல் நீர் முதலியன சிறுகுடலுக்கு வருகின்றன.
- டிரிப்ஸினோஜன், கைமோடிரிப்ஸினோஜன், கணைய லிப்பேஸ்கள், கார்பாக்ஸிபெப்டிடேஸ்கள், கணைய அமைலேஸ்கள் மற்றும் நியூக்ளியேஸ்கள் முதலிய நொதிகள் கணைய நீரில் உள்ளன.
- சிறு குடல் கோழைப் படலத்தில் இருந்து சுரக்கப்படும் என்டிரோ கைனேஸ் என்ற நொதியானது கணைய நீரில் உள்ள செயல்படாத டிரிப்ஸினோஜனை செயல்படும் டிரிப்ஸினாக மாற்றுகிறது.
- டிரிப்ஸின் ஆனது கணைய நீரில் உள்ள செயல்படாத கைமோடிரிப்ஸினோஜனை செயல்படும் நொதியான கைமோடிரிப்ஸினாக மாற்றுகிறது.
- கல்லீரலில் சுரக்கப்படும் பித்த நீர் எந்தவித செரிமான நொதிகளும் இல்லை.
- எனினும் பித்தநீர் ஆனது உணவில் உள்ள கொழுப்பைப் பால்மமாக மாற்றுகிறது.
Similar questions