பித்தநீரில் செரிமான நொதிகள் இல்லை. இருந்தும் செரித்தலில் முக்கியத்துவம் பெறுகிறது ஏன்?
Answers
Answered by
0
பித்த நீர் செரித்தலில் முக்கியத்துவம் பெறுவதன் காரணம்
பித்த நீர்
- மெல்லிய தசையாலான பித்தநீர் பையில் கல்லீரல் செல்களில் சுரக்கும் பித்தநீர் சேமிக்கப்படுகிறது.
- பித்தநீரில் இறந்த சிவப்பணுக்களின் சிதைவினால் உருவான ஈமோகுளோபினின் பொருட்களில் இருந்து உருவான பிலிரூபன் மற்றும் பிலிவெர்ட்டின் போன்ற பித்த நிறமிகள், பித்த உப்புகள், கொலஸ்ட்ரால் மற்றும் பாஸ்போ லிபிட் முதலியன உள்ளன.
- கல்லீரலில் சுரக்கப்படும் பித்த நீரில் எந்தவித செரிமான நொதிகளும் இல்லை.
- எனினும் பித்தநீர் ஆனது உணவில் உள்ள கொழுப்பைப் பால்மமாக மாற்றுகிறது.
- பித்த உப்புகள் கொழுப்புத் துகள்களின் பரப்பு இழுவிசையைக் குறைத்துச் சிறு திவலையாக மாற்றுகிறது.
- மேலும் லிபேஸ் நொதியினை தூண்டி பித்தநீரானது கொழுப்பைச் செரிக்கச் செய்கின்றது.
Similar questions