ஸ்டார்ச் மூலக்கூறுகள் சிறுகுடலை அடைவது முதல் ஏற்படும் வேதி மாற்றங்களைப் பட்டியலிடுக
Answers
Answered by
0
ஸ்டார்ச் மூலக்கூறுகள் சிறுகுடலை அடைவது முதல் ஏற்படும் வேதி மாற்றங்கள்
சிறுகுடலில் உணவு செரித்தல்
- பித்த நீர், கணைய நீர் மற்றும் சிறுகுடல் நீர் முதலியன சிறுகுடலுக்கு வருகின்றன.
- சிறுகுடலில் உணவு இறங்கியவுடன் அதன் மேல் கணைய நொதிகள் செயல்புரிகின்றன.
- கணைய நீரில் ஸ்டார்ச்சை செரிக்கக்கூடிய நொதிகள் உள்ளன.
- கணைய அமைலேஸ் ஆனது கிளைக்கோஜன் மற்றும் ஸ்டார்ச்சை நீராற்பகுத்து மால்டோஸாக மாற்றுகிறது.
- மால்டோஸாக மாற்றப்பட்ட ஸ்டார்ச் மூலக்கூறுகள் சிறுகுடலில் குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன.
- அதாவது மால்டோஸ் ஆனது மால்டேஸ் உதவியால் குளுக்கோஸ் மற்றும் குளுக்கோஸாக மாற்றப்படுகிறது.
- அது போலவே சுக்ரோஸ் ஆனது சுக்ரேஸ் உதவியால் குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸாக மாற்றப்படுகிறது.
- லாக்டோஸ் ஆனது லாக்டேஸ் உதவியால் குளுக்கோஸ் மற்றும் காலக்டோஸாக மாற்றப்படுகிறது.
Attachments:
Similar questions