கலோரி மதிப்பின் அடிப்படையில் புரதத்திற்கும் கொழுப்பிற்கும் இடையிலான வேறுபாடு மற்றும் உடலில் இவற்றின் பங்கு குறித்து எழுதுக.
Answers
Answered by
1
கலோரி மதிப்பின் அடிப்படையில் புரதத்திற்கும் கொழுப்பிற்கும் இடையிலான வேறுபாடு
புரதங்கள்
- அமினோ அமிலங்களின் மூலமான புரதங்கள் உடல் வளர்ச்சி மற்றும் செல்களின் பழுது நீக்கத்திற்கு பயன்படுகிறது.
- ஓரளவு புரதங்கள் மட்டுமே உடலில் சேமிக்கப்படுகின்றன.
- பெரும்பாலான புரதங்கள் நைட்ரஜன் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன.
- புரதத்தின் கலோரி மதிப்பு 5.65 கி.கலோரிகள் / கிராம் ஆகும்.
- புரதத்தின் உடற்செயலியல் எரிதிறன் மதிப்பு 4 கி.கலோரிகள் / கிராம் ஆகும்.
கொழுப்பு
- லிபிடுகள் என்பது கொழுப்பு அல்லது கொழுப்பிலிருந்து பெறப்படும் பொருள் ஆகும்.
- நம் உடலில் சேமித்து வைக்கப்பட்டு உள்ள மிகச் சிறந்த ஆற்றல் மூலம் கொழுப்பு ஆகும்.
- கொழுப்பின் கலோரி மதிப்பு 9.45 கி.கலோரிகள் / கிராம் ஆகும்.
- கொழுப்பின் உடற்செயலியல் எரிதிறன் மதிப்பு 9 கி.கலோரிகள் / கிராம் ஆகும்.
Similar questions