செரிமான நொதிகள் தேவையின் போது மட்டுமே சுரக்கின்றது. விவாதிக்கவும்.
Answers
Answered by
1
Sry i do not know this language so i can't ans it
Answered by
3
செரிமான நொதிகள்
- செரிமான நொதிகள் உணவு உட்கொள்ளும் போது மட்டுமே சுரக்கின்றது.
உமிழ்நீர்
- வாய்குழியில் சுரக்கப்படும் உமிழ்நீரில் நீர், Na+. K+. Cl-, HCO3- முதலிய மின்பகு பொருட்கள், டயலின் என்ற உமிழ்நீர் அமைலேஸ், லைசோசைம் என்ற பாக்டீரிய எதிர்ப்புப் பொருள் மற்றும் கோழை என்ற உயவுப் பொருள் முதலியன உள்ளது.
- டயலின் என்ற உமிழ்நீர் அமைலேஸ் ஆனது ஸ்டார்ச்சை இரட்டைச் சர்க்கரை மூலக்கூறாக மாற்றுகிறது.
இரைப்பை நீர்
- இரைப்பையில் இரைப்பை நீர் ஆனது உணவு வாயினுள் இருக்கும் போதே சுரப்பு துவங்குகிறது.
- இரைப்பை நீரில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பல முன்னொதிகளும் காணப்படுகின்றன.
- ஹைட்ரோ குளோரிக் அமிலம் ஆனது செயல்படாத முன்னொதியான பெப்ஸினோஜனை செயல்படும் பெப்ஸினாக மாற்றுகிறது.
- பெப்சின் ஆனது உணவிலுள்ள புரதத்தைப் புரோடியோஸ்களாகவும், பெப்டோன்களாவும் மாற்றுகிறது.
- இளம் குழந்தைகளின் இரைப்பை நீரில் ரென்னின் என்ற புரத நொதி ஆனது கால்சியம் அயனியின் முன்னிலையில் பால் புரதமான காசினோஜனை காசினாக மாற்றுகிறது.
பித்தநீர்
- கல்லீரலில் சுரக்கப்படும் பித்தநீர் ஆனது உணவில் உள்ள கொழுப்பைப் பால்மமாக மாற்றுகிறது.
- பித்த உப்புகள் கொழுப்புத் துகள்களின் பரப்பு இழுவிசையைக் குறைத்துச் சிறு திவலையாக மாற்றுகிறது.
- மேலும் லிபேஸ் நொதியினை தூண்டி பித்தநீரானது கொழுப்பைச் செரிக்கச் செய்கின்றது.
கணையம்
- கணைய அமைலேஸ் ஆனது கிளைக்கோஜன் மற்றும் ஸ்டார்ச்சை நீராற்பகுத்து மால்டோஸாக மாற்றுகிறது.
- கணைய லிபேஸ் ஆனது டிரைகிளிசரைடுகளை தனித்த கொழுப்பு அமிலம் மற்றும் மோனோ கிளிசரைடுகளாக மாற்றுகின்றன.
- கணைய நியூக்ளியேஸ் ஆனது நியூக்ளிக் அமிலங்களை நியூக்ளியோடுடைகள் மற்றும் நியூக்ளியோசைடுகளாக மாற்றுகின்றன.
Similar questions