சலத்தால் பொருள் செய்தே மார்த்தால் பசுமண்
கலந்து நீர் பெய்திரீஇ யற்று
உவமை அணி
அணி பொருத்தம்
Answers
══════ •『 ♡』• ══════
♥♥♥GIVE THANKS = TAKE THANKS♥♥♥
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.
(குறள் 660: வினைத்தூய்மை அதிகாரம்)
சலத்தால் – பொய்ப்புரட்டால், வஞ்சனையால், தீயவினைகளால்
பொருள் செய்து – பொருளை ஈட்டி (யார்? அமைச்சர் என்பது உள்ளுறை)
ஏம் ஆர்த்தல் – அதனால் களிப்பு ஊட்டுதல் (யாருக்கு – ஆள்வோர்க்கு)
பசுமண் கலத்துள் – பச்சை மண்ணால் செய்த மண்பாண்டத்தில்
நீர் பெய்து – நீரை ஊற்றி
இரீ இயற்று – வைத்தார் போன்றதே (இரண்டுமே நிலைகாது, தங்காது)
அமைச்சராக இருக்கின்றவர் வஞ்சத் தீவினைகளால், பொய்ப்புரட்டால், பொருளை ஈட்டி ஆள்வோரை இன்பக் களிப்புறச் செய்தலென்பது, பச்சைமண் கொண்டு செய்த பாண்டத்தில் நீரை ஊற்றிவைத்து சேமிக்க முயல்வதைப் போன்றதாம். இரண்டு நிலைக்காது, தீவினைகளால் வருகிற ஆக்கம் நில்லாது ஓடிவிடும் என்பதால், அவ்வாக்கத்தால் வரும் களிப்பும் நிலையில்லாது போய்விடும்.
சுட்டமண் கலயமே நீரை சேகரிக்கவல்லது என்பது சுட்டும் பொருளாக இருந்து, சுடுவது, நேர்மையான வழியிலே உழைப்பதையும், கடினப் பாதையை உணர்த்துவதையும் குறிப்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்
நற்றிணைப் பாடலொன்று இந்த பசுமண் கொண்டு செய்த கலத்தை உவமையாக்கிக் கூறுகிறது அழகாக. ஒரு தலைவன் பொருள் ஈட்ட வேண்டி தலைவியை விட்டுச் செல்லுகையில், இருவருக்கும் இடையிலான் நெகிழ்வை விவரிக்கையில், “ஈர்மண் செய்கை நீர்படு பசுங்கலம் பெருமழைப் பெயற்கேற் றாங்கெம்” என்கிறது. அதாவது, தலைவனின் நெஞ்சமானது, தலைவியோடு ஒன்றுபட்டு, ஈரமண்ணால் செய்யப்பட்டு ஈரம் காயாத பசுமட்கலம் ஒன்று பெரிய மழை நீரை ஏந்தவைத்தலால், அது அந் நீரொடு வேறுபாடின்றிக் கரைந்தொழிவதுபோல கரைந்துவிட்டது என்கிறது இப்பாடல். சங்கஇலக்கியப் பாடல்களின் உவமை நயத்துக்கு இப்பாடல் ஒரு எடுத்துக்காட்டு.
குறுந்தொகையிலும், தாங்க இயலாத துன்பம் கொள்ளும் நெஞ்சை “பெயநீர்க் கேற்ற பசுங்கலம்” போல என்று சொல்லி கரையும் தன்மை சுட்டப்படுகிறது.
I AM ALSO TAMIL BRO
Explanation:
சலத்தால் சபாருை்சசய் தத மார்த்தல் பசுமண்
கலத்துநீ ர்சபய்திரீஇ யற்று – இக்குறைில் காணும் உவம உருபு---------.
அ. ெசுமண் ஆ. யற்று இ. மார்த்தல் ஈ. கலத்துந