Biology, asked by anjalin, 9 months ago

எலு‌ம்‌பிடை‌த் தசைக‌ள் இத‌னிடையே அமை‌‌ந்து‌ள்ளன. அ) முதுகெலு‌ம்பு‌த் தொட‌ர் ஆ) மா‌ர்பெலு‌ம்பு இ) ‌விலா எலு‌ம்புக‌ள் ஈ) குர‌ல்வளை‌த் துளை

Answers

Answered by steffiaspinno
0

விலா எலு‌ம்புக‌ள்

சுவாச‌ம் நடைபெறு‌ம் முறை  

  • தசை நா‌ர்க‌ள் நுரை‌யீர‌ல்க‌ளி‌ல் காண‌ப்படுவது‌ கிடையாது.
  • எ‌னினு‌ம் ‌விலா எலு‌ம்‌பிடை‌த் தசைக‌ள் ம‌ற்று‌ம் ‌உதர‌விதான‌த்‌தி‌ன் இய‌க்க‌த்‌தி‌ன் காரணமாக நுரை‌யீர‌ல்க‌ள் சுரு‌ங்‌கி ‌வி‌ரி‌‌கி‌ன்றன.
  • ‌விலா எலு‌ம்‌பிடை‌‌த் தசைக‌ள் ‌விலா எலு‌ம்புகளு‌க்கு இடையே அமை‌ந்து உ‌ள்ளது.
  • மா‌ர்பறையை வ‌யி‌ற்றறை‌யி‌லிரு‌ந்து ‌பி‌ரி‌ப்பதாக உதர‌விதான‌ம் எ‌ன்ற ‌திசு‌ப் படல‌ம் உ‌ள்ளது.
  • ‌விலா எலு‌ம்‌பிடை‌‌த் தசைக‌ள் ‌விலா எலு‌ம்புகளை இய‌க்கு‌கி‌ன்றன.
  • உதர‌விதான‌ம், வெ‌ளி விலா எலு‌ம்‌பிடை‌‌த் தசைக‌ள் ‌ம‌ற்று‌ம் உ‌ள் விலா எலு‌ம்‌பிடை‌‌த் தசைக‌ள் முத‌லியனவ‌ற்‌றினா‌ல் ஒரு அழு‌த்த வேறுபாடு தோ‌ன்று‌கிறது.
  • அதே போல நுரை‌யீர‌‌லினு‌ள் உ‌ள்ள கா‌ற்‌றி‌ன் அழு‌த்த‌ம் வ‌ளிம‌ண்டல‌க் கா‌ற்றழு‌த்தை‌விட‌க் குறைவதா‌ல் உ‌ட்சுவாச‌ம் நடைபெறு‌கிறது.
  • நுரை‌யீர‌ல்களு‌ள் உ‌ள்ள கா‌ற்றழு‌த்த‌ம் வ‌ளிம‌ண்டல‌க் கா‌ற்றுழு‌த்த‌த்தை ‌விட அ‌திக‌ரி‌ப்பதா‌ல் வெ‌ளி‌ச் சுவாச‌ம்  நடைபெறு‌‌கிறது.
Similar questions