உட்சுவாசத்தின் போது உதரவிதானம் அ) விரிவடைகிறது ஆ) எந்த மாற்றமும் இல்லை இ) தளர்ந்து மேற்குவிந்த அமைப்பைப் பெறுகிறது. ஈ) சுருங்கித் தட்டையாகிறது.
Answers
Answered by
0
சுருங்கித் தட்டையாகிறது
உட்சுவாசம்
- உட்சுவாசம் ஆனது உதரவிதானத் தசைகளும், வெளி விலா எலும்பிடைத் தசைகளும் சுருங்குவதால் தொடங்குகிறது.
- உதரவிதானத் தசைகளும், வெளி விலா எலும்பிடைத் தசைகளும் சுருங்குவதால் விலா எலும்புகளும், மார்பெலும்பும் மேற்புறமாகவும், வெளிப் புறமாகவும் இழுக்கப்பட்டு மார்பறை ஆனது பக்கவாட்டிலும் முதுகுப்புற வயிற்றுப்புற அச்சிலும் பெரியதாக மாறுகிறது.
- இதனால் உதரவிதானத்தின் வட்டத் தசைகள் சுருங்குவதால், மேல் நோக்கி உயர்ந்திருந்த உதர விதானம் ஆனது தட்டையாகிறது.
- இதனால் மார்பறையின் மேல்-கீழ் அச்சில் கொள்ளளவு அதிகரிக்கிறது.
- இதனால் நுரையீரலின் கொள்ளளவு அதிகரித்து, நுரையீரலில் உள்ள காற்றழுத்தம் ஆனது வளிமண்டல காற்றழுத்தத்தைவிட குறைகிறது.
- இதனே ஈடுசெய்ய வெளிக்காற்று நுரையீரலுக்கு செல்கிறது.
- இதுவே உட்சுவாசம் ஆகும்.
Attachments:
Similar questions