தட்டைப்புழு, மண்புழு, மீன், இறால், கரப்பான் பூச்சி மற்றும் பூனை ஆகியவற்றின் சுவாச உறுப்புகளின் பெயர்களைக் கூறு.
Answers
Answered by
1
உயிரினங்களின் சுவாச உறுப்புகள்
- கடற்பஞ்சுகள், குழியுடலிகள் மற்றும் தட்டைப் புழுக்கள் போன்ற எளிய உடல் அமைப்பை உடைய உயிரினங்களில் எளிய விரவல் முறையில் உடல் பரப்பின் வழியே வாயு பரிமாற்றம் நடைபெறுகிறது.
- மண் புழுக்கள் ஈரப்பதம் உள்ள தோலின் மூலமும், பூச்சிகள் (கரப்பான் பூச்சி) மூச்சுக் குழல்களின் மூலமும் சுவாசிக்கின்றன.
- நீர் வாழ் கணுக்காலிகள் (இறால்) மற்றும் மெல்லுடலிகளில் சுவாச உறுப்புகளாக செவுள்கள் உள்ளன.
- தவளையின் சுவாச உறுப்புகளாக நுரையீரல் மற்றும் ஈரமான தோல் உள்ளது.
- மீன்களில் சுவாச உறுப்பாக செவுள்களும், இரு வாழ்விகள், ஊர்வன, பறப்பன மற்றும் பாலூட்டிகளில் (பூனை) சுவாச உறுப்புகளாக இரத்தக் குழல்கள் நிரம்பிய நுரையீரல்களும் உள்ளன.
Answered by
0
Explanation:
Name the respiratory organs of Flatworm, Cockroach, Fish and Cat.
Similar questions