இரத்த சிவப்பணுக்களில் பைகார்பனேட் உற்பத்தியை ஊக்குவிக்கும் நொதியின் பெயரைக் கூறு.
Answers
Answered by
1
கார்பானிக் அன்ஹைட்ரேஸ்
- கார்பானிக் அன்ஹைட்ரேஸ் என்ற நொதி ஆனது இரத்தச் சிவப்பு அணுக்களில் அதிக அளவிலும், இரத்தப் பிளாஸ்மாவில் குறைந்த அளவிலும் உள்ளது.
- திசுக்களில் சிதைவு மாற்ற நிகழ்ச்சிகளின் விளைவாக உருவாகின்ற கார்பன் டை ஆக்சைடின் பகுதி அழுத்தம் (pCO2) ஆனது அதிகமாக உள்ளதால், கார்பன் டை ஆக்சைடு ஆனது இரத்தத்திற்குள் ஊடுருவிச் சென்று பை கார்பனேட் மற்றும் ஹைட்ரஜன் அயனிகளாக மாறுகிறது.
- இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களுக்குள் நுழைந்ததும் அங்கு நீருடன் சேர்ந்து கார்பானிக் அமிலமாக மாறுகிறது.
- கார்பானிக் அன்ஹைட்ரேஸ் என்ற நொதி ஆனது இந்த வினைக்கு வினையூக்கியாக செயல்படுகிறது.
- கார்பானிக் அமிலம் நிலையானது அல்ல.
- இதனால் கார்பானிக் அமிலம் ஆனது ஹைட்ரஜன் அயனி மற்றும் பைகார்பனேட் அயனிகளாகப் பிரிகிறது.
Attachments:
Similar questions