காற்றானது நாசியிலிருந்து மூச்சுக்குழாயை அடையப் பல உறுப்புகளைக் கடந்து செல்கிறது. அவ்வுறுப்புகளின் பெயர்களை வரிசைப்படுத்துக.
Answers
Answered by
0
மனித சுவாச மண்டலம்
- காற்றானது நாசியிலிருந்து மூச்சுக்குழாயை அடைய மனித சுவாச மண்டலத்தில் பல உறுப்புகளைக் கடந்து செல்கிறது.
- மனித சுவாச மண்டலத்தில் புறநாசித் துளைகள், நாசிக் குழி, தொண்டை, குரல் வளை, மூச்சுக் குழல், மூச்சுக் கிளைக் குழல்கள், மூச்சுக் கிளை நுண்குழல்கள் மற்றும் காற்று நுண்ணறைகள் கொண்ட நுரையீரல் முதலியன உள்ளன.
- புற நாசிப்பகுதி முதல் முனை மூச்சுக் கிளை நுண்குழல் வரை உள்ள பகுதி கடத்தும் பகுதி ஆகும்.
- கடத்தும் பகுதியில் உள்ள சுவாசப் பரப்புகள் உள்ளிழுக்கப்படும் காற்றை குளிர்வித்தும், வெப்பப்படுத்தியும் காற்றின் வெப்பநிலையை சீராக்குகிறது.
- சுவாசப் பகுதி என காற்று நுண்ணறை மற்றும் நாளங்கள் முதலியன அழைக்கப்படுகின்றன.
Attachments:
Similar questions