வாயுக்களின் ஊடுருவல் நுண் காற்றுப்பை பகுதிகளில் மட்டுமே நடைபெறுகிறது. சுவாச மண்டலத்தின் வேறு எந்தப் பகுதியிலும் இது நடைபெறுவதில்லை. விவாதிக்கவும்.
Answers
Answered by
2
வாயு பரிமாற்றம்
- காற்று நுண்ணறைகள் வாயு பரிமாற்றத்திற்கான முதன்மை சுவாசப் பரப்பு ஆகும்.
- ஆக்சிஜன் மற்றும் CO2 ஆகியவற்றின் பகுதி அழுத்த வேறுபாட்டின் காரணமாக திசுக்கள் மற்றும் இரத்தத்திற்கும் இடையே எளிய விரவல் முறையினால் வாயுபரிமாற்றம் நடைபெறுகிறது.
- pO2 என ஆக்சிஜனின் பகுதி அழுத்தமும், pCO2 என கார்பன் டை ஆக்சைடின் பகுதி அழுத்தமும் குறிப்பிடப்படுகிறது.
- பகுதி அழுத்த வேறுபாட்டின் காரணமாகவே காற்று நுண்ணறைகளில் உள்ள ஆக்சிஜன் இரத்தத்திற்குள் சென்று பின் திசுக்களை அடைகிறது.
- அதுபோல CO2 திசுவிலிருந்து வெளியேற்றப்பட்டு காற்று நுண்ணறைகளை அடைகிறது.
நுண் காற்றுப்பை பகுதி
- காற்றுப்பைகளில் உள்ள வாயு விரவலுக்கான சவ்வு ஆனது தட்டை எபிதீலியச் செல்கள், இரத்த நுண் நாளங்களின் எண்டோதீலிய செல்கள் மற்றும் இவற்றிற்கு இடையுள்ள அடிப்படை பொருட்கள் ஆகிய மூன்று அடுக்கினால் ஆனது ஆகும்.
- மெல்லிய தட்டை எபிதீலியச் செல்கள் இருவகை செல்களை கொண்டுள்ளது.
- மிக மெல்லிய வகை 1 செல்களில் விரவல் முறையில் வாயு பரிமாற்றம் துரிதமாக நடைபெறுகிறது.
- தடித்த வகை 2 செல்கள் மேற்பரப்பிகள் என்ற வேதிப்பொருட்களை உற்பத்தி செய்து சுரக்கின்றன.
- இதன் காரணமாகவே வாயுக்களின் ஊடுருவல் நுண் காற்றுப்பை பகுதிகளில் மட்டுமே நடைபெறுகிறது.
Similar questions