திறந்த வகை சுற்றோட்டம் மற்றும் மூடிய வகை சுற்றோட்டங்களை வேறுபடுத்துக.
Answers
Answered by
2
திறந்த வகை சுற்றோட்டம் மற்றும் மூடிய வகை சுற்றோட்டம் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடுகள்
திறந்த வகை சுற்றோட்டம்
- திறந்த வகை சுற்றோட்ட மண்டலத்தில் சுற்றோட்டத் திரவமாக ஹீமோலிம்ப் உள்ளது.
- ஹீமோலிம்ப் ஆனது இரத்தக் குழலின் வழியே பைக்குழிக்கு இதயத்தால் உந்தி அனுப்பப்படுகின்றது.
- இந்த பைக்குழி ஆனது ஹீமோசில் என அழைக்கப்படுகிறது.
- கணுக்காலிகள் மற்றும் பெரும்பான்மையான மெல்லுடலிகளில் திறந்த வகை சுற்றோட்டம் காணப்படுகிறது.
மூடிய வகை சுற்றோட்டம்
- மூடிய வகை சுற்றோட்ட மண்டலத்தில் சுற்றோட்டத் திரவமாக இரத்தம் உள்ளது.
- இரத்தம் ஆனது இதயத்திலிருந்து உந்தித் தள்ளப்பட்டு, இரத்த நாளங்கள் வழியே பாய்கிறது.
- வளைத்தசைப் புழுக்கள், தலைக்காலிகள் மற்றும் முதுகெலும்பிகளில் மூடிய வகை சுற்றோட்டம் காணப்படுகிறது.
Similar questions