வலது வென்ட்ரிக்கிள் சுவர் இடது வென்ட்ரிக்கிள் சுவரை விட மெல்லியது ஏன்?
Answers
Answered by
0
Answer:
i dont understand your question
Answered by
1
வலது வென்ட்ரிக்கிள் சுவர் இடது வென்ட்ரிக்கிள் சுவரை விட மெல்லியதாக இருக்க காரணம்
- இதயத்தின் வலது வெண்ட்ரிக்கிள் அறையில் இருந்து உருவான நுரையீரல் பொதுத் தமனி ஆனது வலது நுரையீரல் தமனி மற்றும் இடது நுரையீரல் தமனி என இரண்டாக பிரிகிறது.
- வலது மற்றும் இடது நுரையீரல் தமனிகள் முறையே வலது மற்றும் இடது நுரையீரலுக்கு ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தை எடுத்துச் செல்கிறது.
- இதற்கு அதிக இரத்த அழுத்தம் தேவையில்லை.
- இடது வெண்ட்ரிக்கிளிலிருந்து பெருந்தமனி தோன்றுகிறது.
- பெருந்தமனி ஆனது ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கின்றன.
- இதற்கு அதிக இரத்த அழுத்தம் தேவைப்படுகிறது.
- இதனாலே வலது வெண்ட்ரிக்கிளைவிட அளவில் பெரியதாக, தடித்த சுவரினை உடையதாக இடது வெண்ட்ரிக்கிள் உள்ளன.
Similar questions