காயம்பட்ட இரத்தக்குழலில் இரத்தம் உறைதலின் நிகழ்வுகளை வரைபடத்துடன் விளக்குக.
Answers
Answered by
0
இரத்தம் உறைதல்
- இரத்தம் உறைதல் என்பது உடலில் காயம்பட்ட பகுதியில் இருந்து இரத்தம் வெளியேறுவதை தடுக்கும் வகையில் இரத்தக்கட்டி உருவாகி அதிகமான இரத்தப் போக்கினை நிறுத்தும் நிகழ்வு என அழைக்கப்படுகிறது.
- இரத்தக் குழாய்களில் உள்ள எண்டோதீலியம் சிதைவடைந்து அதன் சுவரிலுள்ள இணைப்புத் திசுக்களை இரத்தம் நனைக்கும் போதுதான் இரத்த உறைதல் நிகழ்வு தொடங்குகிறது.
- இணைப்புத் திசுக்களில் உள்ள கொல்லாஜன் இழைகளுடன் இரத்தத் தட்டுகள் ஒட்டிக் கொண்டு இரத்த இழப்பைத் தடுக்கின்ற சில இரத்த உறைதல் காரணிகளை வெளியிடுகின்றன.
- இந்த காரணிகள் இரத்தத்தட்டு கொத்துகளால் உருவான அடைப்பினை ஏற்படுத்தி உடனடியாக இரத்த இழப்பினை தடுக்கின்றன.
- கால்சியம் அயனிகள் மற்றும் வைட்டமின் கே முன்னிலையில் செயல்படாத புரோத்ராம்பின் புரதம் செயல்படும் திராம்பினாக மாறுகிறது.
- கரைந்த நிலையிலுள்ள ஃபைப்ரினோஜனை கரையாத ஃபைப்ரின் இழையாக திராம்பின் மாற்றுகிறது.
- ஃபைப்ரின் இழைகள் ஒன்றுக்கொன்று இணைந்து இரத்தச் செல்களை சூழ்ந்து ஒரு வலைப்பின்னல் அமைப்பினை உண்டாக்குகிறது.
- இந்த வலைப்பின்னல் ஆனது காயம்பட்ட இரத்தக்குழலில் அடைப்பினை ஏற்படுத்தி இரத்தம் வெளியேறாமல் தடுக்கிறது.
Attachments:
![](https://hi-static.z-dn.net/files/d7d/7a075c4bf24d4db5c9dd048be8089b9b.png)
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
Geography,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago